2006ம் ஆண்டு முதல் - சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர்களை (MEET THE STATE TOPPERS)
நிகழ்ச்சி - காயல்பட்டினத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில், மாநில அளவில் முதல் இடம் பெறும் மாணவர் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு - அரசு பொது
தேர்வை நோக்கியிருக்கும் காயல் மாணவர்களுடன், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வந்துள்ளனர்.
10வது ஆண்டாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் - இவ்வாண்டு அரசு பொது தேர்வில் - முதல் இடம்பெற்ற - திருப்பூரை சார்ந்த மாணவி பவித்ரா
மற்றும் கோயம்புத்தூரை சார்ந்த மாணவி நிவேதா ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் நகர் அளவில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியருக்கும், சிறந்த தேர்வு
முடிவுகளை தந்த பள்ளிக்கூடங்களுக்கும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியினை, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பு, இக்ராஃ கல்விச் சங்கத்துடன் - 2006ம் ஆண்டு முதல் - இணைந்து நடத்தி வருகிறது.
நிகழ்ச்சி தேதி, இடம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்.
மாநிலத்தின் முதல் மாணவி பவித்ரா (வலது புறத்தில் இருந்து இரண்டாவது) தனது குடும்பத்துடன்
மாநிலத்தின் முதல் மாணவி நிவேதா தனது குடும்பத்துடன்
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 7:15 pm / 17.08.2015] |