இந்தியாவின் 69ஆவது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில், இன்று காலை 08.30 மணியளவில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியை மு.ஜெஸீமா முன்னிலை வகிக்க, கணித ஆசிரியை கே.பீர் ஃபாத்திமா தேசிய கொடியேற்ற, மாணவியர் உள்ளிட்ட அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தமிழாசிரியை ஐ.ஹஸீனா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஆசிரியை ஈ.க்ளோரி ஜெபமலர் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
முன்னதாக நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவியருக்கு பள்ளி தலைமையாசிரியை பரிசுகளை வழங்கினார்.
இவ்விழாவில், பள்ளியின் அனைத்து ஆசிரியையர், மாணவியர், அலுவலர்கள், பெற்றோர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி சார்பில் கடந்தாண்டு (2014) நடைபெற்ற சுதந்திர நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |