இந்தியாவின் 69ஆவது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில், இன்று காலை 09.00 மணியளவில் சுதந்திர நாள் விழா, பள்ளி நிர்வாகிகளுள் ஒருவரான ஆர்.எஸ்.அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்றது.
வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, எஸ்.ஏ.முஹம்மத் அலீ, முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், ஏ.கே.கலீலுர்ரஹ்மான், டாக்டர் ஜாஃபர் ஸாதிக், கே.எம்.டீ.சுலைமான், ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீ, ஹாஃபிழ் ஏ.எல்.முஹம்மத் ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவர் ஹாஃபிழ் எஸ்.ஏ.இன்ஸாஃப் ஸுலைமான் கிராஅத் ஓதி விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் இறைவணக்கப் பாடல் பாடினர்.
தலைமையாசிரியர் டி.ஸ்டீஃபன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தம்மாம் காயல் நல மன்ற முன்னாள் தலைவரும், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பின் தலைவருமான டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் தேசிய கொடியேற்றி, வாழ்த்துரையாற்றினார். மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நன்றியுரையைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இன்று காலை 09.30 மணியளவில், பள்ளியின் மாணவியர் பிரிவில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது. எம்.எல்.முனவ்வரா, எம்.ஏ.கே.கிதுரு ஃபாத்திமா ஆகியோர் முன்னிலை வகிக்க, எம்.ஏ.சுபைதா தேசிய கொடியேற்ற, மாணவியர் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பள்ளி தலைமையாசிரியை எம்.ஒய்.செய்யித் ஹஸீனா தலைமையுரையாற்றினார். மாணவியர் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, நன்றியுரை - நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
தகவல் & படங்கள்:
K.M.T.ஸுலைமான்
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி சார்பில் கடந்தாண்டு (2014) நடைபெற்ற சுதந்திர நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |