இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் நடத்தப்பட்ட சுதந்திர தின விழா குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
இந்தியாவின் 69ஆவது சுதந்திர நாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள அதன் அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸில் வளாகத்தில் சுதந்திர தின விழா, காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
கட்சியின் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, மாவட்ட துணைத்தலைவர் மன்னர் ஏ.ஆர்.பாதுல் அஸ்ஹப் நெறிப்படுத்தினார். முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தாய்லாந்து காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் வாழ்த்துரையாற்றினார்.
இவ்விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தேசிய கொடியேற்றி வைத்து, வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற அரங்க நிகழ்ச்சியில், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நகர தலைவர் தலைமையுரையாற்றினார். நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், மனித நேயம் ஆகியவற்றை வலியுறுத்தி கட்சியின் மூத்த நிர்வாகி எஸ்.எஸ்.இ.காழீ அலாவுத்தீன் ஆலிம் இறைப்பிரார்த்தனை செய்தார்.
இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், இளைஞரணி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், நகர நிர்வாகிகளான எம்.இசட்.ஸித்தீக், கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, கே.எம்.முஹம்மத் உமர், நகரப் பிரமுகர் எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கடந்தாண்டு (2014) நடத்தப்பட்ட சுதந்திர தின விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |