இந்தியாவின் 69ஆவது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி சார்பில் இன்று காலை 09.15 மணியளவில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி துணைத்தலைவர் எஸ்.எம்.உஸைர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஜுபைர் அலீ பாக்கவீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
கிராஅத்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, பள்ளி தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
விழாவிற்குத் தலைமை தாங்கிய - எல்.கே. பள்ளிகளின் தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் தேசிய கொடியேற்றி வைக்க, மாணவர்கள் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து கொடி வா்ழத்துப் பாடலும், தேச பக்திப் பாடலும், எல்.கே. நினைவுப் பாடலும், பள்ளி பாடலும் மாணவர்களால் பாடப்பட்டன. நிறைவில், சாதனை மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
எல்.கே.துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் ஊமைத்துரை சாமுவேல் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், எல்.கே.பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |