இந்தியாவின் 69ஆவது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, ஹாங்காங் அட்மிராலிட்டி பகுதியிலுள்ள யுனைட்டெட் சென்டர் கட்டிடத்தின் 16ஆவது தளத்தில் இயங்கி வரும் ஹாங்காங் நாட்டிற்கான இந்திய தூதரகத்தில், இன்று காலை 09.00 மணியளவில் சுதந்திர நாள் விழா நடைபெற்றது.
அந்நாட்டிற்கான இந்திய தூதர் ப்ரசாந்த் அகர்வால் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தேசிய கொடியேற்றி வைத்து, வாழ்த்துரை வழங்கினார்.
கீழக்கரையைச் சேர்ந்த வணிகப் பிரமுகரும், ஹாங்காங் இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் தலைவருமான ஹமீத் ஜலால், ஹாங்காங் இளம் இந்திய நண்பர்கள் குழுமத்தைச் சேர்ந்த தைக்கா உபைதுல்லாஹ் ஆகியோருடன், கீழக்கரை - காயல்பட்டினம் ஊர்களைச் சேர்ந்த ஹாங்காங் வாழ் பொதுமக்கள் 10 பேரையும் உள்ளடக்கி, சுமார் 50 தமிழர்கள் உட்பட, சிந்தி, குஜராத்தி, தெலுங்கு, மராத்தி, பெங்காளி உள்ளிட்ட சுமார் 350 பேர் இவ்விழாவில் இணைந்து கலந்துகொண்டு இந்திய தூதருக்கு வாழ்த்து கூறினர். அவரும் அனைவருக்கும் வாழ்த்து கூறினார்.
நிறைவில் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
தகவல் & படங்கள்:
ஹாங்காங்கிலிருந்து...
தைக்கா உபைதுல்லாஹ்
கடந்தாண்டு (2014) ஹாங்காங் இந்திய தூதரகத்தில் நடைபெற்ற சுதந்திர நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |