செய்தி: பப்பரப்பள்ளி நிலத்தில் குப்பை கொட்டுவதை செப். 03க்குள் நிறுத்தாவிட்டால், அறவழியில் போராட்டம் வீரியப்படும்! நகராட்சி ஆணையரிடம் எல்.எஃப்.ரோடு பகுதி மக்கள் தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byVilack sma (jeddah)[27 August 2015] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41770
பப்பரப்பள்ளி நிலத்திற்கு உரிமையாளர்கள் ஆரம்பத்திலேயே இதை எதிர்த்து இருந்தால் பிரச்சினை வந்திருக்காது . செப்டம்பர் 3 ம் தேதிக்குள் , நகராட்சி " தற்காலிக " மாற்று இடத்தை தேடிப்பிடிக்கும் . ஆனால் நிரந்தரமாக ஒரு இடம் ...???? அது இந்த ஆட்சியில் முடியாத காரியம் .
மேலும் , இன்று ஊரின் பெரும்பான்மையான இடங்கள் பப்பரப்பள்ளியாகத்தான் உள்ளது . ஒவ்வொரு தெருவிற்கும் குறிப்பிட்ட நேரத்தில் நகராட்சியின் குப்பை அள்ளும் லாரி வருகிறது . நம்மில் எத்தனை பேர் அந்த லாரியில் குப்பை கொட்டுகிறோம் ? லாரி போன பிறகு சாவகாசமாக வந்து குப்பையை தெருவில் வீசி எறிகிறோம் .
இதைவிட மோசமானது , எவருக்கும் தெரியாமல் அடுத்தவன் வீட்டு வாசலில் இரவோடு இரவாக , அல்லது மதியம் ஊர் அடங்கிய நேரத்தில் குப்பையை வைக்கிறோம் .
பப்பரப்பள்ளி ..அந்த நில உரிமையாளர்களுக்கு எந்த அளவு முக்கியமானதோ அதுபோல்தான் ஒவ்வொரு வீட்டுக்காரருக்கும் அவரவர் வீட்டின் சுகாதாரம் முக்கியமானது . என்று திருந்தும் இந்த சமூகம் ?///
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross