செய்தி: பப்பரப்பள்ளி நிலத்தில் குப்பை கொட்டுவதை செப். 03க்குள் நிறுத்தாவிட்டால், அறவழியில் போராட்டம் வீரியப்படும்! நகராட்சி ஆணையரிடம் எல்.எஃப்.ரோடு பகுதி மக்கள் தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (Royal Kaya-628204l)[28 August 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41771
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர். KWT காயல்பட்டணம் நல அறக்கட்டளை என்ற அமைப்பு ஊரில் உதயமான நேரம்.L .F .ரோடு வாழ் குடிமக்கள் அனைவர்களின் சார்பாக ஒரு கோரிக்கைமனு KWT அமைப்புக்கு கொடுக்கப்பட்டது. அதில் அவர்கள் வசிக்கும் பகுதியில் குப்பைகளை கொட்டுவதால் ஏற்படும் சொல்லணாத்துயரத்தை விளக்கி.அனைத்து மக்களின் கையெழுத்து சம்மத்ததுடன் கோரிக்கை மனுவை கொடுத்து எங்கள் அமைப்பின் மூலம் நகராட்சியிலிருந்து நல்ல தீர்வை பெற்று தரும்படி வேண்டிக்கொண்டார்கள்!
இந்த L .F ரோடு மக்களின் குறையை தீர்த்து விட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் KWT அமைப்பின் தலைவர் அபுபக்கர் அவர்களும், இணைசெயலாலர்களாகிய முஜாஹித், அகமது சாகிப் அவர்களும் அந்த நேரத்தில் செயலாராக இருந்த நான் உட்பட பல சகோதரர்களோடு அன்றைய நகராட்சி த் தலைவர் ஜனாப் சேகு அப்துல் ரஹ்மான் ஹாஜி அவர்களை காயல் நகராட்சி அலுவலகத்தில் L .F ரோடு மக்கள் சார்பாக இந்த குப்பைகொட்டும் தீமை கழையும் கோரிக்கையை முன்வைத்தோம்!
எங்கள் கோரிக்கையை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட தலைவர் அவர்கள் அந்த L .F மக்கள் படும் இன்னல்களுக்காக மனம் வருந்தினார்.அதோடு அதற்கு ஒரு தீர்வு வழியையும் கூறினார்கள்!.அவர்களின் சொந்ததமான இடத்தில் அதாவது கற்புடையார் பள்ளிக்கு வெகுதூர வடக்கே ( இப்போது பையாகேஸ் அமைவதற்காக கட்டப்படும் இடத்தில் என்று நினைக்கிறேன் ) அந்த இடத்தில் 100 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்ட பெரிய பத்து குழிகளை தோண்டி அதில் இந்த குப்பைகளை போட்டு மூடி விட வேண்டும். அந்த குழிகள் நிறைந்தவுடன் புதிய குழிகளை தோண்ட வேண்டும் இதற்காக என் நிலத்தை இலவசமாக தருகிறேன் என்று கூறிய தலைவர் JCB மூலம் குழி தோண்டுதல் மேலும் அந்த இடத்திற்கு வாகனம் வரக்கூடிய சாலைகள் அமைத்தல் ஆகிய வேலைகளை KWT அமைப்புதான்செய்ய வேண்டும் என்றார்கள்! !
ஊர்நலன் நாடி KWT அமைப்பும் அவர்களின் நிபந்தனைக்கு ஒப்புகொண்டது . முறைப்படி எழுதி தாருங்கள் என்று கேட்கவே எழுத்து மூலமும் நாங்கள் உறுதியளித்தோம்!
எங்களிடம்,வாய்,எழுத்து மூலம் எல்லா உறுதியையும் பெற்றுக்கொண்ட தலைவர் அவர்கள் நான் முறைப்படி உங்கள் KWT.க்கு பதிவாளர் அலுவலகத்தின் மூலம் பதிவு பத்திரம் தயாரித்தே தந்து விடுகிறேன் பிறகு நீங்கள் வேலையை அதிகார பூர்வமாகவே ஆரம்பித்து விடலாம் என்றார்கள்
நாங்களும் மெத்த மகிழ்வுடன் வெளி வந்தோம்.அடுத்து தலைவர் எங்களை அழைப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்த்தோம் அடுத்த ஒரு வாரம்வரை எங்களை அழைத்தபாடில்லை.சகோதரர் முஜாஹித் அவர்கள் தலைவர் மகனாரை சந்தித்து விஷியத்தை விளக்கி உங்கள் தந்தை அழைப்புக்காக காத்திருக்கிறோம் உடனே கேட்டு சொல்லுங்கள் என்று சொல்லியுள்ளார்!
தந்தையிடம் கேட்டு சொன்ன பதிலை பெற்ற நாங்கள் ஆச்சிரியமும் விரக்தியும் அடைந்தோம் தலைவர் சொல்லி அனுப்பி விசியம் யாதெனில். நாங்கள் (KWT அமைப்பு ) தூத்துக்குடியில் சுற்றுப்புற சூழல் அமைப்பு அலுவலகத்தில் அந்த இடத்தில் வேலை செய்வதற்கு தடையில்லா சான்றிதல் கொண்டு வர வேண்டுமாம் அப்படி கொண்டு வந்தால் அடுத்த நிமிடமே அவர்கள் நிலத்தில் தோண்டும் உரிமையை பத்திர பதிவு செய்து தந்து விடுவார்களாம்!
தலைவர் அவர்களை நகராட்சியில் பார்க்க முடியவில்லை வீட்டிலாவது சந்திக்க நேரம் ஒதுக்கித்தாருங்கள் என்று அவர்கள் மகனாரிடம் வேண்டினோம். தலைவர் சொன்ன வேலையை செய்து முடித்த கையோடு அவர்களை சந்திக்கணுமாம், அதுவரை சந்திக்க விரும்பவில்லை என்ற தோரணையில் பதில் வந்தது!
மேற்கண்ட அனைத்து சம்பவங்களும் அல்லாஹ் அறிய அன்றைய KWT பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது அவர்கள் அனைவர்களும் அறிந்ததே!
ஆக, மேற்கண்ட என் உண்மை விளக்கத்தினால் நாம் அறிய வருவது, இப்போது பிரச்சனைக்குள்ளாகி நீதி மன்றத்தில் இருக்கும் இடத்தை நிச்சியம் சுற்றுப்புற சூழல் இயக்ககம் அனுமதி அளிக்காது என்பது உறுதியாகிறது. அதுமட்டுமல்ல இதற்கு எளிதில் அனுமதி கிடைக்காது என்பதை அன்றைய தலைவர் அவர்களும் அறிந்திருந்த சிதம்பர ரகசியமோ என்ற ஐயப்பாடும் எழுந்துள்ளது! .
ஆகவே அன்புள்ளம் கொண்ட கண்ணியவான்களே,
ஊர் மக்கள் நலன் நாடி விட்டு கொடுக்கும் மனப்பக்குவத்தில் அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட ஒர் இடத்தை தேர்வு செய்து அதில் குப்பைகொட்டவோ பயாகேஸ் அமைக்கவோ உடனடி நடவடிக்கையை எடுக்கவும்!
இந்த நன்மை பயற்கும் நிகழ்விற்கு எந்த" ஈகோ" வும் பார்க்காமல் நகராட்சியின் தலைவர் முதல் அனைத்து உறுப்பினர்களும் மற்றும் ,அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி எங்கள் ஊரை இந்த இன்னல் களிலிருந்து காப்பாற்றுங்கள்.அல்லாஹ் உங்கள் நல்லெண்ணத்திற்குறிய நன்மைகளை பன்மடங்களாக்கித் தருவான்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross