சென்னை ஐக்கிய சங்கத்திற்கு வேண்டுகோள் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[01 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4181
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
காயல்பட்டணம் ஐக்கிய சங்கம் சென்னை, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அத்தனையும் நல்லவையும், இப்போதைக்கு அவசியமானவையும் கூட. தீர்மானங்களை தீர்மானித்ததுடன் நின்றிடாமல் செயலாக்கம் பெற்று நாம் பயனடைந்திட வல்ல அல்லாஹ்! உதவிடுவான்.
--------------------------------
தீர்மானம் - 1 & 2 இந்த இரண்டையும் பொறுப்பேற்றிருப்பவர்கள் கடினமாக முயற்சித்து இன்ஷா அல்லாஹ்! நிச்சயமாக வெற்றியாக்கித் தருவார்கள் என்று நம்புகிறோம்.
தீர்மானம் - 3 இந்த தீர்மானத்திற்கு நேர்மையானவர்களும், தமது வாரிசுகள் நல்லமுறையில் வாழ வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்களும், சமுதாயமும் , கலாச்சாரமும் சீர்குலையக் கூடாது என்று நினைப்பவர்களும் கட்டுப்படுவார்கள் என்று நம்புகிறோம்.
தீர்மானம் - 4 இதுவும் நல்ல யோசனைதான், அதன்படி முயற்சி செய்தோமானால் வெற்றிக்கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்!.
தீர்மானம் - 5 இந்த தீர்மானம் நமது உரிமையை கேட்டுப் பெறுவது என்பதால் சிறந்தது என்றாலும் இதிலே மிகவும் நுட்பமாக நமது கவனத்தை செலுத்தி செயலாற்றிட வேண்டும்.
---------------------------------
DCW தொழிற்சாலை நிலவரியிலே மோசடி செய்திருப்பது இத்தனை ஆண்டுகளாக நமது நகராட்சிக்கு எப்படித் தெரியாமல் போனதோ?
DCW ஆய்வுக்குழுவே ரூ.7 லட்சம் மாத வாடகை சிபாரிசு செய்தும் 1¼ லட்சம்தான் வாடகை இத்தனை ஆண்டுகளும் செலுத்தி மீதியை வேறுவகை செலவாக கணக்கு காட்டுகிறது என்றால் இது மிகப்பெரும் மோசடியே.
குறைந்தது 10 ஆண்டுகளுக்குரிய வித்தியாச தொகையை பெறுவதென்றாலும் ஏறத்தாழ 7 கோடி ரூபாய் கிடைக்கும்.
நமதூர் மக்களுக்கு 20 % வேலை வாய்ப்பு இல்லாவிட்டாலும் ஏதோ ஓரளவு வேலை வாய்ப்புக் கிடைக்கலாம்.
புதிதாக தொழிற்சாலை தொடங்க தடை கோரி கோர்ட்டில் வழக்கு தொடங்கிடவும் செய்யலாம், இதெல்லாம் நல்ல திட்டங்களே! இதற்காக ஒரு குழு அமைத்திட பொதுக்குழு தீர்மானித்திருப்பது நல்ல செயலே.
-------------------------------------
சென்னை ஐக்கிய சங்கத்திற்கு வேண்டுகோள் :-
DCW தொழிற்சாலை சம்பந்தமான செயல்களுக்கு ஒரு 'குழு'வை அமைத்திடும்போது மிகவும் நுணுக்கமாக ஆலோசித்து அதற்குத் தகுதி வாய்ந்தவர்களை தேர்ந்தெடுத்து செயல்படுத்துங்கள். எவரும், யாருக்கும் பணிந்து போய்விடக்கூடாது.
இப்படி எழுதுவதால் யாரும் பணத்தையோ, பதவியையோ வாங்கி கொண்டு பணிந்திடுவார்கள் என்ற அர்த்தமட்டுமில்லை மிரட்டலுக்கும் பயந்திடக்கூடாது என்பதே.
ஊரில் ஏற்படுகிற கொடிய நோய்களுக்கெல்லாம் DCW தொழிற்சாலை மட்டும்தான் காரணம் என்று சொல்லமுடியாது என்றாலும்கூட மிக முக்கிய காரணமாக இருப்பது DCW தொழிற்சாலைதான் என்பதை பல ஆய்வுகளையும் DCWயின் நடவடிக்கைகளையும் வைத்து சொல்லலாம்.
மேலும் DCW சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு 'குழு'வை நியமிக்கும்போது, தற்போது DCW செயல்பாட்டை கண்காணித்து செய்திகளை சேகரித்துக் கொண்டும், சாம்பிள்களை எடுத்து சோதனைக் கூடங்களுக்கு அனுப்பி பரிசோதித்துக் கொண்டும், மேலும் புற்று நோய் சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நமது அமைப்புக்களையும் அந்த 'குழு'வில் இடம்பெற செய்ய வேண்டியது.
இப்படி ஒரு கூட்டமைப்பாக செய்யும்போது பல விசயங்களும் - கலந்துரையாடல் மூலமும், ஆவணங்கள் மூலமும் ஆராயப்பட்டு நல்லதொரு செயல்வடிவம் பெறும்.
அதல்லாமல், அந்த அமைப்புகள் எல்லாம் செய்வது நோய்கள், சுகாதாரம் சம்பந்தமான அணுகுமுறை, நாங்கள் செய்யப்போவதோ அரசியல் ரீதியான அணுகுமுறை அதனால் அவர்களையெல்லாம் இதில் சம்பந்தப்படுத்த தேவை இல்லை என்று தயவு செய்து தப்புக் கணக்கு போட வேண்டாம்.
நாம் எல்லோருமே ஊருக்கும், ஊர் மக்களுக்கும் நன்மையை செய்யவே நாடுகிறோம் என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் இது விசயத்தில் மிகுந்த கவனம் செலுத்தி செயல்பட்டு வெற்றிக் கொள்வோமாக.
எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் அனைவரையும் ஒற்றுமையாக, ஒரு கொடியின் கீழ் இருந்து செயல்பட்டு செயலாற்றிட கிருபை செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross