சாலை பணி திட்ட மதிப்பீட்டு வல்லுநர் நமது நகர்மன்றத்தின் துணை தலைவர் அடுத்தமுறை 2016 ல் நகர்மன்ற தலைவராக வர வாழ்துக்கள்..! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[11 September 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41826
கூட்டம் நடத்த கோரப்பட்ட கடிதத்தில் உறுப்பினர்களின் கையெழுத்து பெறும் படிவத்தை உன்னிப்பாக கவனியுங்கள் - அதில் வார்டு வரிசை - 7 / 13 / 15 ஆகிய மூன்று உறுப்பினர்களை இடம் பெற செய்யவில்லை என்பது தெளிவாகிறது - இந்த மூன்று போரையும் துணை தலைவர் ஏன்..? எதற்காக..? கையெழுத்து பெற படிவத்தில் கோர்க்கவில்லை என்பது அவரின் ஒருமுக பார்வை எதை நோக்கி செல்கிறது என்பதை நகரின் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவர்களும் புரிந்திருப்பார்கள் - ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் புதிய சாலை போடுவதற்கான ஆர்வம் அக்கறை இவர்களுக்கு மட்டும் தான் உள்ளதா..! மற்ற 3 மூன்று உறுப்பினர்களுக்கும் அதில் விருப்பமல்ல என்ற தவறான புரிதலை பொது மக்களுக்கு பரப்ப செய்யும் காரியமா..!
மேலும் துணை தலைவரின் கடிதத்தில்... பொதுமக்கள் நலன் கருதி இச்சாலையை ரூபாய் 46 லட்ச மதிப்பீட்டில் - அதாவது 1 பொதுமக்கள் நலன் கருதி என்ற வாசகம் பொதுவானது, 2 அதில் இச்சாலையை ரூபாய் 46 லட்ச மதிப்பீட்டில் என்ற வாசகம் பலரை யோசிக்க வைக்கிறது - அதாவது ஒரு (பேவர் பிளாக் சாலை) சாலையை அதன் பணி குறித்து (46 லட்சம்) மதிப்பீடு செய்யும் அளவுக்கு நமது துணை தலைவருக்கு திறமையும் / அனுபவமும் இருக்கிறதே / இருக்கிறதா என்று நகரின் சமூக ஆர்வலர்கள் பலருக்கு திகைப்பூட்டுகிறது - இப்படி ஒரு திறமைமிக்கவர் திட்ட மதிப்பீட்டில் நகராட்சியில் பொறியாளர்களுக்கு நிகராக உள்ளவர் நமது நகர்மன்றத்தில் துணை தலைவராக இருப்பது கண்டிப்பாக நகர்மக்களை வானுயர்த்தி வியப்படைய செய்யும் என்பதில் சந்தேமில்லை..!
இரண்டாம் குடிநீர் திட்டம் / சர்வே எண் 278 / 1 B யின் பயோ கேஸ் திட்டம் / அதன் அணுகு சாலை / மற்றும் நகராட்சி புதிய கட்டிடம் ஆகியவைகளுக்கு நமது துணை தலைவர் திட்ட மதிப்பீடு ஆலோசனை அரங்கில் கண்டிப்பாக பங்கெடுத்து அவரின் திறமைகளை / அனுபவங்களை பகிர்ந்து பலரையும் கவர்ந்திருக்கலாம்..!
சாலை பணி திட்ட மதிப்பீட்டு வல்லுநர் நமது நகர்மன்றத்தின் துணை தலைவர் அடுத்தமுறை 2016 ல் நகர்மன்ற தலைவராக வர வாழ்துக்கள்..!
குறிப்பு:- உறுப்பினர்கள் / தலைவர் / அலுவலர்ல்கள் உருப்படியாக கூட்டம் நடத்த ஒத்துழைப்பு அளித்து நகர்மக்களின் நலன் கருதி நல்லபடி விரைவில் தரமான சி-கஸ்டம்ஸ் சாலை அமைய நாம் அனைவர்களும் பிராதிப்போம். ஆமின்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross