காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் புதிய சாலை போடுவதற்கான ஒற்றைப் பொருள் குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக, 11.09.2015 வெள்ளிக்கிழமையன்று 15.00 மணியளவில் நகர்மன்றக் கூட்டம் கூடுகிறது. இதுகுறித்து, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-
நகர்மன்ற உறுப்பினர்கள் கையெழுதிட்ட 27.8.2015 தேதிய கடிதம் 31.8.2015 அன்று கிடைக்கபெற்றது. அந்த கடிதத்தில் சி கஸ்டம்ஸ் சாலை குறித்த ஒரு பொருள் இடம்பெற்றிருந்தது. அச்சாலையை - 46 லட்ச ரூபாய், மதிப்பீட்டில் - பேவர் பிளாக் (PAVER BLOCK) முறையில் புனரமைக்க கோரப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில், இது குறித்த கூட்டத்தினை,10.9.2015 தேதிக்குள் நடத்திட கோரப்பட்டிருந்தது.
இந்த சாலையையும், பிற பொருட்களையும் இணைத்து ஜூலை மாதம் கூட்டம் நான் கோரியது நினைவிருக்கலாம்.
இந்த கடிதம் கிடைத்தவுடன், இப்பொருளை கொண்டு 9.9.2015 அன்று கூட்டம் நடத்திட அஜெண்டா தயார் செய்யும்படி ஆணையருக்கு கடிதம் (1.9.2015) நான் அனுப்பினேன்.
இதற்கிடையே, உறுப்பினர்களிடம் இருந்து 2.9.2015 தேதிய மற்றொரு கடிதம், 3.9.2015 அன்று கூரியர் மூலம் வந்தது. அதில் - 27.8.2015 தேதிய கடித விஷயங்களே இருந்தது. ஆனால், கூட்டத்தினை 14.9.2015 தேதிக்க்குள் நடத்திட கோரப்பட்டிருந்தது. இந்த கடிதம் குறித்தும் ஆணையருக்கு தகவல் தெரிவித்து, 9.9.2015 அன்று கூட்டத்தினை - அஜெண்டா தயார் செய்து நடத்திட கோரியிருந்தேன்.
இப்பொருளையும் சேர்த்து சாதாரண கூட்டத்தினை நடத்திட - அஜெண்டா தயார் செய்யும் பணி துவக்கப்பட்டது. இருப்பினும் அப்பணி முடிவுறாத காரணத்தால், 11.9.2015 வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு - சி கஸ்டம்ஸ் சாலை குறித்த பொருளை கொண்டு கூட்டத்தினை நடத்திட உறுப்பினர்களுக்கு பதிவு தபால் மூலம் அஜெண்டா அனுப்பியுள்ளேன். நேரடியாகவும், நகராட்சி அலுவலர் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
சி-கஸ்டம்ஸ் சாலை நகரின் பிரதான சாலை மட்டுமன்றி, கடற்கரையை இணைப்பதால், அதிக போக்குவரத்து மிகுந்த சாலை. இந்த சாலைக்கு, பேவர் பிளாக் முறை சரியாக இருக்காது, தரமான தார் சாலை அவசியம் என்பது என் கருத்து என்பதால், அதனை - நகர்மன்றத் தலைவர் குறிப்பாக - அஜெண்டாவில் இணைத்து அனுப்பியுள்ளேன்.
இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் பதிவு செய்துள்ளார்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik |