காயல்பட்டினம் கோமான் மேலத் தெருவிலுள்ள நியாயவிலைக் கடையில், இம்மாதம் 12ஆம் நாளன்று பொது வினியோகத்திட்டம் தொடர்பான குறைகளைக் களைவதற்காக மனுநீதி நாள் முகாம் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும், பொது விநியோகத்திட்டத்தின் கீழ் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது. மனுநீதி நாள் முகாமில், பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளை தொpவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம்.
செப்டம்பர் 2015 மாதத்திற்கான மனு நீதி நாள் முகாம் 12.09.2015 அன்று சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 01.00 மணி வரை கீழ்காணும் ஊராட்சிகளில் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி வட்டத்தில் கட்டலாங்குளம் கிராமத்தில் தூத்துக்குடி சார் ஆட்சியரும்,
ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் தெற்குகாரச்சேரி கிராமத்தில் தூத்துக்குடி பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளரும்,
திருச்செந்தூர் வட்டத்தில் காயல்பட்டிணம் 3-ம் நிலை நகராட்சி கோமான் மேலத்தெரு கடைக்கு திருச்செந்தூர் கோட்டாட்சியரும்,
சாத்தான்குளம் வட்டத்தில் புத்தன்தருவை கிராமத்தில் தூத்துக்குடி தனித்துணை ஆட்சியரும் (முத்திரை),
கோவில்பட்டி வட்டத்தில் ஊத்துப்பட்டி கிராமத்தில் கோவில்பட்டி கோட்டாட்சியரும்,
ஒட்டப்பிடாரம் வட்டத்தில் கீழஅரசடி கிராமத்தில் தூத்துக்குடி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளரும்,
விளாத்திகுளம் வட்டத்தில் நமச்சிவாயபுரம் கிராமத்தில் தூத்துக்குடி மாவட்ட வழங்கல் அலுவலரும்,
எட்டையாபுரம் வட்டத்தில் மேலக்கரந்தை கிராமத்தில் துணை ஆட்சியரும் (சிறப்பு திட்டங்கள் அமலாக்கம்) பார்வையாளர் நியமன அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
சம்பந்தப்பட்ட ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல், முகவரி மாற்றம், ஒப்புவிப்பு சான்று கோரும் மனுக்களை முகாமில் கொடுத்து பயனடையலாம், இதர மனுக்களுக்கு 15 தினங்களுக்குள் பதில் தெரிவிக்கப்படும் என்ற விபரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |