சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் இலவச தையல் மற்றும் எம்ப்ராய்டரி பயிற்சி பெற்ற மகளிர்க்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு காயல்பட்டணத்தில் உள்ள பெண்களுக்கு ஆறு
மாத கால இலவச தையல் மற்றும் எம்ப்ராய்டிங் பயிற்சி துவக்கப்பட்டது. இந்த பயிற்சியின் நிறைவு விழா டி.சி.டபிள்யூ நிறுவன வளாகத்தில்
நடைபெற்றது. மக்கள் தொடர்பு துறை துணைமேலாளர் சித்திரைவேல் வரவேற்று பேசினார். தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மை நல அதிகாரி விஜயா முன்னிலை வகித்தார். காயல்பட்டிணம் நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், இலவச தையல் மற்றும் எம்ப்ராய்டரி பயிற்சி பெற்ற 35 பெண்களுக்கு, சான்றிதழ்கள், தையல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
டி.சி.டபிள்யூ செயல் உதவித்தலைவர்கள் மே.சி.மேகநாதன் (நிர்வாகம்), சுபாஷ் டாண்டன் (காஸ்டிக் சோடா) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மதர் சமூக சேவை நிறுவனத்தின் இயக்குநர் கென்னடி, மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் அருணா, பினோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் சீனியர் ஆபீசர் பிரகாஷ் நன்றி கூறினார்.
தகவல்:
www.tutyonline.com
|