செய்தி: டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் இலவச தையல் பயிற்சி பெற்ற மகளிர்க்கு சான்றிதழ் வழங்கும் விழா! காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜன் தலைமையில் நடந்தது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நச்சு ஆலையின் கபட நாடகம்! posted byசாளை அப்துல் ரஸ்ஸாக் (காயல்பட்டினம்)[12 September 2015] IP: 59.*.*.* India | Comment Reference Number: 41836
ஒரு புறம் நமதூரை மரண படுகுழியாக மாற்றிக் கொண்டு, அதை மறைக்க நமதூர் மக்களுக்கு இன்னொரு புறம் இலவச தையல் பயிற்சி. நம்மை நன்றாகத் தான் பிரித்தாள்கிரார்கள்.
இலவச மருத்துவ முகாம், விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது, போன்று விளம்பரம் செய்து, தான் இந்த ஊரின் நலனில் அக்கறை உள்ளவன் போன்று நடிக்கிறார்கள்.
இந்த இலவச தையல் பயிற்சி பெற்ற நமதூர்(?) பெண்களை என்ன சொல்வது?
ஆணையர் இந்த விழாவில் கலந்து கொண்டது பற்றி சகோதரர் செயத் முஹம்மத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த நச்சு ஆலையும் நமதூரில் தான் இருக்கிறது. அந்த பகுதிக்கும் இவர் தான் ஆணையர். அவர் நமதூரை சார்ந்தவர் இல்லை. அந்த நச்சு ஆலையை பற்றி அவருக்கு என்ன கவலை? நமதூரை சார்ந்த ஓரிரு உறுப்பினர்கள், அதன் விழாவில் கலந்து கொண்டு, தங்களது 'விசுவாசத்தை' காண்பித்ததை விட இது பெரிய விஷயம் இல்லை.
இந்த ஆலை பல வருடங்களாக தனது நஞ்சை நமதூர் கடலில் கலக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும்.
//தலைவிக்கு எதிரா கோடி பிடிபவர்களே இப்போலுது என்ன சொல்ல போகிறீர்கள் ,......// அந்த ஆலையை எதிர்ப்பதில், தலைவி ஆதரவு / எதிர்ப்பு எங்கிருக்கிறது?
அந்த ஆலை உள்ள பகுதியில், அதிகபட்சமாக 400 ஓட்டுக்கள் இருக்கலாம். சென்ற நகரமன்ற தேர்தலில், சகோதரி ஆபிதா அவர்களோ அல்லது அவரின் சார்பாக அவர் பிரசாரத்தின் முக்கிய பிரமுகர்களோ அந்த ஆலையின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து வாக்கு சேகரிக்கவில்லையா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross