செய்தி: மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தொகுப்பு 3, விதிமுறை 3(2) விதிகள்படி - கூட்டம் நடத்த நகர்மன்றத் தலைவருக்கு உறுப்பினர்கள் கடிதம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[19 September 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41871
சேர்மன் மேடம்...! நீங்க இப்படி எல்லாம் கணக்கு கேட்டீர்களேயானால் இனி உருப்படியாக நகர் மன்ற கூட்டம் நடக்காது.
நகராட்சியில் செயற்க்கையான தண்ணீர் தட்டுபாடு உருவாக்கம் முறியடிக்கப்பட வேண்டும்..!
உறுப்பினர்கள் இது விசியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு சகோதரர் சில நாட்களுக்கு முன்பு என்னிடம் கூறியது இப்போது இந்த செய்தியின் மூலம் நினைவுக்கு வருகிறது அதாவது வானியக்குடி தெரு மற்றும் அதன் உட்பகுதி தெருக்களில் உள்ள எவருமே டாங்கர் லாரி மூலம் தண்ணீர் கேட்காத போது தானாகவே சம்பந்தமில்லாமல் டாங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்த போது அங்குள்ள குடியிருப்பு மக்கள் தண்ணீர் பிடித்து வீட்டில் வைக்க எந்த ஒரு பாத்திரமும் / குடமும் / வாளியும் அப்போது காலியாக இல்லை - காரணம் அங்கு தேவைக்கு அதிகாமாகவே தண்ணீர் அவர்களின் வீட்டில் இருந்துள்ளது - பிறகு அங்கு வந்த ஒரு சகோதரர் அந்த டாங்கர் லாரியை அழைத்து கொண்டு போய் அவருக்கு தேவையான தண்ணீரை அவரின் கட்டிட பணிக்கு பெற்று கொண்டு டாங்கர் ஓட்டுனரை கவனித்து அனுப்பியதாக சொல்லபடுகிறது -
23.5 லட்ச ரூபாய்க்கு டாங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் குறித்து ஆணையரிடம் இருந்து முறையான விளக்கம் பெறப்பட்டப்பின் - கூட்ட பொருளில் இணைப்பது குறித்து முடிவெடுக்க நீங்கள் முற்ப்பட்டால் அக்கூட்டம் எப்படி சுமூகமாக நடந்தேறும் ? என்ற கேள்விகளும் மனதில் கணம் நிறைந்த கவலைகளும் நகரின் சமூக ஆர்வலர்களின் மத்தியில் எழுகிறது - ஆட்கொள்கிறது.
மக்கள் வரி பணம் மக்களின் தேவைகளுக்காக செலவிட பட வேண்டும்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross