செய்தி: “சில புல்லுருவிகளின் சதிச்செயலே இது!” - தைக்காவில் நடைபெற்ற DCW நிகழ்ச்சி குறித்து பிலால் பள்ளி நிர்வாகம் விளக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்லாஹ்வின் தண்டனையோ நினைத்துப்பார்க்க முடியாது. posted byN.S.E.மஹ்மூது ( காயல்பட்டணம்)[29 September 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 41897
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பானவர்களே!
பள்ளியின் நிர்வாகம், இது சில புல்லுருவிகள் செய்த சதிச்செயல் என்று கூறி விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் – அவர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் ஏற்றுக் கொள்ளக்கூடியதே!.
------------------------------
தைக்கா நிர்வாகத்திற்கு இந்த பணிகள் நடந்ததும் அதற்கு யார்
செலவு செய்தார் என்பதும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை – இதற்கு இன்ன,இன்ன நபர் பணம் தந்திருக்கிறார் என்று ஊரில் உள்ள செல்வந்தர்களின் பெயரை சொல்லி வேலை முடியும்வரை மறைத்திருந்தாலும், திறப்பு விழாவுக்கு வெளிநபர்கள் வருவது தெரியாமல் இருக்க எந்த முகாந்திரமும் இல்லை – வெளிநபர்கள் வருகிறார்கள் என்பதை அறிந்த உடனே, தைக்கா நிர்வாகம் அந்த நிகழ்வை தடுத்திருக்க வேண்டும் – மேலும் உடனே பெரிய பள்ளி நிர்வாகத்திடமும் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். அப்படி ஏதும் செய்தார்களா?
---------------------------------
எது எப்படியோ இந்த மாதிரி புல்லுருவிகளை இனம் கண்டு தண்டிக்க வேண்டும் / ஒதுக்கி வைக்க வேண்டும்! – காலம் தாமதமாகாமல் நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்களாகவே திருந்தினால் நல்லது இல்லையேல் பாதிக்கப்படுகிற ஒவ்வொருவரின் நாவாலும், இதயத்தாலும் சபிக்கப்படுவார்கள் – அதைவிட பெரிய தண்டனையை அவர்களுக்கு மனிதர்களால் கொடுக்க முடியாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross