அல்லாஹ் நமதூரை காப்பாற்றுவானாக ஆமீன்!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[15 October 2015] IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 42013
நான் என்றும் மதிக்கும் சகோதரர் மக்கி காக்கா அவர்களே, அண்ணல் நபி (ஸல் )அவர்கள் கூறிய ஹதீஸ்,
சில வேளைகளில் கொடிய வறுமை ஈமானைகூட பலஹீனப்படித்திவிடும் என்று கூறியதாக கேட்டிருக்கிறேன் இந்த ஹதீஸ் எந்த அளவிற்கு ஆதாரபூர்வமனது என்பதை உங்களைபோன்ற உலமாக்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன்!
நான் குறிப்பிட வருவது, இவர்கள் இறைமறுப்பாளர்கள் மட்டுமல்ல.கொலைகாரர்கள்,கொடிய கொலைகாரர்கள் இறைமறுப்பாளர்கள் கூட சிலவேளைகளில் தன் மனது சரி என்று படும் வேளையில்,அவர்கள்மனதிற்குள் ஹிதாயத்தானது படைத்தோனின் பலமான புகுத்தலுக்கு ஆளானால் மனம் மாறுவதற்கு வழிவகையுண்டு,
ஆனால் இவர்களோ கொலைகாரர்கள் எவ்ளவுக்கவ்வளவு கொலைகள் அதிகமாக செய்கிறார்களோ அவ்ளவுக்கவ்வளவு
ஆதாயமுண்டு. இவர்களின் கொலைப்பயணம் முடியப்போவதும் இல்லை!
முன்னர் ஒர் அமைப்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தும் பொழுது,என்னுடைய கருத்துப்பதிவாக கூறியது,உங்களது போராட்டம் பற்றி மூலை முடுக்குகளிலெல்லாம் அதாவது வீதியில் கூறிவிற்கும் வாடா,வடை வியாபார சகோதரி முதல் தங்க,வையிர வியாபாரிகள் வரை அனைவர் களுக்கும் அந்த கொலைகார ஆலையின் கொடுமைகளை உள்ளார்ந்த மனதுடன் உணரும் அளவிற்கு எடுத்து சொல்லி ஆதரவு கேளுங்கள் என்றேன்!
அதே பாணியில் தான் மக்கி காக்கா உங்கள் கருத்தை இன்று இங்கே பதிவு செய்திருக்கிறீர்கள்.எப்படித்தான் நாம் பாடுபட்டு நம் எதிர்ப்பினை தீவிரமாக தெரிவித்தாலும், ஏராளமான எட்டப்பர்கள் இருக்கிறார்களே,இவர்களை என்ன சொல்வது?அதிலும் ஒருசிலர் அந்த ஆலைக்கு ஆதரவு மனப்பான்மை முற்றிலும் இல்லாவிட்டாலும்,அந்த ஆலையை எதிர்ப்பவர்கள் சிலர்,சில அமைப்பு எங்களுக்கு எதிரி அதனால் அந்த ஆலையை ஆதரிக்கத்தான் செய்வோம் என்று கூறி செயலில் இறங்கும் ஈனர்களை,கயவர்களை யார் தண்டிப்பது?
எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருகின்ற ஏக இறைவன் இமியளவு பொழுதில் நினைத்தால் போதும் நாசமாய் போய் விடுவார்கள். இந்த விஷக்கிருமி ஆலையினால் வீழ்ந்து விட்டவர்கள் குடும்ப கண்ணீரின் கடுமை ஏதோ எளிதானது என்ற இறுமாப்பு எண்ணத்துடன் உலவுகிறார்கள் அல்லாஹ் நமதூரையும் நமதூர்மக்களையும் காப்பாற்றி காவல்புரிவானாக ஆமீன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross