Re:...வாய்மையே வெல்லும் posted bymackie noohuthambi (kayalpatnam )[23 December 2015] IP: 116.*.*.* India | Comment Reference Number: 42537
தி ஹிந்து தமிழ் நாளிதழ் ஆசிரியர் சமஸ் அவர்களுக்கும் இந்த இணையதள ஆசிரியர் சாலிஹ் அவர்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே மனதில் பட்டதை துணிச்சலாக தைரியமாக பதிவு செய்கிறார்கள். உம்மு நுமைரா அவர்கள் வெள்ளத்தின் வலிகளை பதிவு செய்தார்கள். சாலிஹ் அவர்களும் அவர்கள் பட்ட துயரத்தை துன்பங்களை பதிவு செய்திருக்கிறார்கள். இருவருக்குமே அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத்திருக்கிறான்.
நான் என்றால் எல்லோரிடமும் அழுது புலம்பி எனது வருத்தத்தை வெளியிட்டிருப்பேன். சாலிஹ் அவர்கள் கூடவே நமதூரின் அவல நிலையை எடுத்து கூறி இருக்கிறார்கள். கலைஞரின் பராசக்தியில் ஒரு வசனம் வரும்...யார் குற்றம்..விதியின் குற்றமா விதியின் பெயரால் வயிறு வளர்க்கும் கயவர்களின் குற்றமா... அந்த வசனம் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் waatsup மூலம் அதே போன்ற வசனத்தை ஒருவர் பேசுகிறார். கடலூர் வெள்ளத்துக்கு யார் குற்றம் என்று குளங்களும் ஏரிகளும் பேசுவதாக அது அமைந்துள்ளது.
நமதூரில் தெருக்கள் குன்றும் குழியுமாக - மழை நீர் தேங்கி நிற்பதால் வயதானவர்கள் நோயாளிகள் பெண்கள் நடப்பதற்கு கூட கஷ்டப் படுகிறார்கள். இந்த ஊரை சிங்கபூராக ஆக்க சொல்லவில்லை. மக்கள் நடமாட வாகனங்களில் பயணிக்க வசதியான ஓர் சராசரி வசதியுள்ள ஊராக மாற்றி தாருங்கள் என்றுதான் மக்கள் கேட்கிறார்கள்.
நானும் சாலிஹ் அவர்களும் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் திருத்துவராஜ் அவர்களிடம் ஒரு சந்தேகம் கேட்டேன்.
நாம் தேர்ந்து எடுக்கும் தலைவர் உறுப்பினர்கள் எல்லோரும் நல்லவர்களாக இருந்தும் நகரமன்ற ஆணையர் நிர்வாக அதிகாரி அவர்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் என்ன செய்யலாம் என்றேன். ஒன்றும் செய்ய இயலாது. அவருக்குதான் வானளாவிய அதிகாரம் உண்டு என்று சொன்னார்.
அல்லாஹ்வின் மீது ஆணை இட்டு இந்த ஊருக்கு நன்மை செய்வோம் என்றுதான் எல்லோரும் நம்மிடம் வாக்குறுதி அளித்து ஆட்சியில் அமர்ந்தார்கள். இப்போது யார் குற்றம் என்று ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதை விட மீதியுள்ள நாட்களில் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்யலாம் என்று யோசிக்க வேண்டும், முதிய தலைமுறைக்கு அனுசரித்து செல்லும் பொறுமை இல்லை. புதிய தலைமுறைக்கு விட்டுக் கொடுக்கும் மனோபாவம் இல்லை. இந்த சூழ்நிலையில் சாலிஹ் போன்ற இளைஞர்கள் இவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமாக செயல்படவேண்டும்.
இன்று நடைபெற்ற ''என் பெயர் பாலாறு'' என்ற ஆவணப் படத்தை பார்த்தேன். 48 ஆண்டுகளாக இரண்டு கட்சிகள் மாறி மாறி மணல் கொள்ளைக்கு மகுடம் சூட்டி இருக்கிறார்கள். முதல்வர்கள் இருவரும் ஊழலின் ஊற்றுக் கண்களாக இருந்திருக்கிறார்கள். நாம் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ அந்த இரு கட்சிகளிலும் ஒட்டிக் கொண்டிருக்கிறோம். மாற்றத்தை தருவோம் என்று களம் இறங்கியுள்ள மருத்துவர் மைந்தனும் தன்னை முதல்வர் வேட்பாளராக்க சம்மதம் என்றால் மதவாத சகிப்பின்மை கட்சியுடன் கூட்டணி வைக்க தயார் என்று அறிவித்திருக்கிறார்கள்.
சீட்டுக்காக கூட்டு - நோட்டுக்காக ஓட்டு - என்ற சித்தாந்தங்கள் வேதங்களாக மாறியுள்ள இந்த தமிழகத்தில் நாட்டுக்காக யார் - நேர்மையாக எந்த காரியத்தையும் செய்ய முடியவில்லை என்பதுதானே நிதர்சன உண்மை. கொழுந்து விட்டு எரியும் நெருப்பு வலயத்துக்குள் கொளுத்தப் படாத கற்பூரமாக காயல்பட்டினத்தை உங்களால் இருக்க செய்ய முடியுமா.
ஆனாலும் உங்கள் போன்ற இளைஞர்கள் மாற்றத்தை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது எங்களுக்கு மன நிறைவை தருகிறது. ஆனால் அதற்காக நீங்கள் தேர்ந்து எடுத்துள்ள பாதைதான் சற்று தயக்கத்தை தருகிறது.
கலந்தாலோசனை என்ற மஷூரா இந்த நகராட்சியில் இல்லை என்பது எனது நிலைப்பாடு. நபிகள் நாயகம் அவர்களுக்கு சர்வ அதிகாரமும் தகுதியும் பலமும் இருந்தது. ஆனாலும் அவர்கள் தங்கள் சகாக்களை எல்லா விஷயங்களிலும் கலந்தாலோசனை செய்தார்கள். மஷூராவில் வஹி உடைய பரகத் இருக்கிறது என்று உலமாக்கள் சொல்கிறார்கள். அல்லாஹ்வும் ஷூரா என்ற ஒரு அத்தியாயத்தையே இறக்கியுள்ளான்.
உங்களைபோன்ற திருமறை செல்வர்களுக்கு என் போன்றவர்கள் இதை சொல்வது கொல்லன் பட்டறையில் ஊசி விற்க வந்தவன் கதைபோல் ஆகிவிடும்.
வள்ளுவம் மிக்க அழகாக சொல்கிறது...
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச்செயல்...
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்.
IF YOU CANNOT SOLVE A PROBLEM, THEN YOU ARE PART OF THAT PROBLEM
உங்கள் நல்ல முயற்சிகளுக்கு அல்லாஹ் வெற்றியை தருவான்.உங்களிடம் பேச்சுத்திறன் உள்ளது அது வாய் மூலம் வருவது எழுத்தாண்மை உள்ளது அது மை மூலம் வருவது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross