மக்கீ நூஹுத்தம்பி மாமா அவர்கள் கவனத்திற்கு! posted byS.K.Salih (Kayalpatnam)[23 December 2015] IP: 116.*.*.* India | Comment Reference Number: 42538
புதிய நகர்மன்றம் பொறுப்பேற்ற துவக்கத்திலேயே, தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. அவ்வனைத்துக் குழுக்களிலும் அங்கம் வகிக்கும் நகர்மன்றத் தலைவர், அப்போது துவங்கி - தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முற்படவில்லை. அனைவரையும் கலந்தாலோசித்தே முடிவெடுக்க நாடினார். ஆனால் உறுப்பினர்கள் அதற்கு முழு ஒத்துழைப்பளிக்கவில்லை. (விதிவிலக்குகள் இருக்கலாம்.)
மக்கள் பணி செய்வதற்காகக் கூடும் நகர்மன்றக் கூட்டங்களில் மக்கள் கருத்தையும் அறிந்து செய்தால்தான் சரி என்று கருதிய நகர்மன்றத் தலைவர் அவர்கள், மக்கள் குறைகளைக் கேட்டறிவதற்காக மக்கள் குறைதீர் கூட்டத்தை மாதந்தோறும் நடத்திட - நடப்பு நகர்மன்றம் பதவியேற்ற துவக்க ஆண்டில் (2011) டிசம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர, அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானமும் நிறைவேறியது. அதன்படி
முதல் கூட்டம் 25.01.2012. புதன்கிழமையன்று (செய்தி எண் 7905) நடைபெற்றது. அதில் 63 பேர் மனு செய்திருந்தனர்.
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றதையடுத்து பிப்ரவரி மாதக் கூட்டம் நடத்தப்படவில்லை.
இரண்டாவது கூட்டம் 28.03.2012. ஞாயிற்றுக்கிழமையன்று (செய்தி எண் 8218) நடத்தப்பட்டது. அதில் 38 பேர் மனு அளித்திருந்தனர்.
மூன்றாவது கூட்டம், 25.04.2012. புதன்கிழமையன்று (செய்தி எண் 8361) நடைபெற்றது. அதில 9 பேர் மனு அளித்தனர்.
நான்காவது கூட்டம் 30.05.2012. புதன்கிழமையன்று (செய்தி எண் 8553) நடைபெற்றது. 20 பேர் அதில் மனு அளித்திருந்தனர்.
ஐந்தாவது கூட்டம், 27.06.2012. புதன்கிழமையன்று (செய்தி எண் 8663) நடைபெற்றது. இதில் 8 பேர் மனு அளித்தனர்.
ஜூலை மாதம் கூட்டம் நடைபெறவில்லை. ஆறாவது கூட்டம், 29.08.2012. புதன்கிழமையன்று நடைபெற்றது. (செய்தி எண்: 9044). இக்கூட்டத்தில் யாரும் மனு அளிக்க வரவில்லை.
முதல் கூட்டத்தில் 63 பேர் மனு அளிக்க வந்த நிலையில், 6ஆவது கூட்டத்தில் யாரும் மனு அளிக்க வரவில்லை. இடையே நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் அனைத்தும், தேவை ஏற்பட்டால் மீண்டும் இக்கருத்துப் பகுதியில் தருகிறேன்.
இந்த மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடைபெறவுள்ளமை குறித்து நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளுக்கெல்லாம் தலைவர் அவர்கள் அழைப்புக் கடிதம் அனுப்பியும் பெரும்பாலோர் "வரவில்லை" என்று சொல்வதை விட "வர விடப்படவில்லை" என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.
மக்கி நூஹுத்தம்பி மாமா அவர்கள், “மஷூறா செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி, எனக்கு முந்தைய கருத்தில் கூறியிருப்பதாலேயே இந்த விளக்கம்.
மொத்தத்தில் மாமா அவர்கள் எதிர்பார்த்த மஷூறா நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தது; மக்கள் அதில் ஆர்வம் காண்பிப்பதிலிருந்து தடுக்கப்பட்டதால் நாளடைவில் அது இல்லாமல் போனது என்பதே உண்மை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross