Re:... posted byசாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[26 December 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42575
மிகவும் அதிர்வை உண்டாக்கிய செய்தி.
மரண செய்திகளுக்கு உடனடியாக கருத்து பதிவும் நான், இவர்களின் மரண செய்தியை படித்ததும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். கருத்து பதிவு செய்யவே மனம் வரவில்லை. காரணம் இந்த விடுமுறையில் ஊரில் அவர்களை ஆரோக்கியத்துடன் கண்டதும், பேசியதும் மனதில் ஓடுகின்றது.
என்ன ஆச்சு,எப்படி மரணம் என்று என் தாயாரிடம் விசாரித்ததில், அவர்களும் கண்ணீருடன் கூறிய நிகழ்வு கூடுதல் அதிர்ச்சி. மரணத்திற்கு ஒரு காரணம் வேண்டும் அல்லவா.??..!!
சிறுவனாக இருக்கும் சமயம், பள்ளி விடுமுறையில் அவர்கள் வீட்டில் தான் அடிக்கடி இருப்பேன். அதிர்ந்து பேச தெரியாத வெள்ளை மனதிற்கு சொந்தக்காரங்க, ஈகைக் குணம், குடும்ப உறுவுகளை கட்டிக்காக்கும் பண்பு .மாஷா அல்லாஹ்.
பின்பு, 25 வருடங்களுக்கு மேலாக அவர்களை கண்டது இல்லை. ஒருமுறை அரவிந்த் மருத்துவமனையில் கண்டது, சரியாக நினைவு வைத்து சுகம் விசாரித்தது.
எங்கள் வீட்டிற்கு வந்து இருந்த கீழக்கரை B.S.A. அப்துல் ரஹ்மான்
ஹாஜி அவர்களின் பேத்தி அவர்களை, அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்ற சமயம் , " இப்போ தான் எங்க வீடு உன் கண்ணுக்கு தெரிந்ததோ" என்று உரிமையுடன் கடிந்து கொண்டது ,
திடீர் என்று ஆட்டோவில் என் வீட்டிற்கு வந்திறங்கி, " நீ தான் புது வீடு கட்டி என்னை அழைக்க வில்லை, அதனால் நானே வந்து விட்டேன் பாரு" என்று உரிமையுடன் நடந்து கொண்டது எல்லாம் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டே இருக்கின்றது.
கிருபையுள்ள வல்ல ரஹ்மான், இவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை மன்னித்து, சுவனத்தின் வாரிசாக அங்கீகரித்து, அங்கு உயர்ந்த பதவியை அளிப்பானாக.
குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross