Re:...மனம் நிறைந்த வாழ்வு... posted bymackie noohuthambi (kayalpatnam )[27 January 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42954
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஆண் மக்கள் பெண்மக்கள் பேரப்பிள்ளைகள் எல்லோரையும் வளமாக பெற்று அவர்கள் மார்க்கக் கல்வியிலும் உலகக் கல்வியிலும் தொழில் கல்வியிலும் நல் அமல்கள் செய்வதிலும் தான தர்மங்கள் செய்வதிலும் சிறந்து விளங்குபவர்களாக வாழ வைத்து அந்த வாழ்க்கையை முழுமையாக பார்த்து அனுபவித்து மனம் நிறைந்த வாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கும் இந்த தாய்க்கு நாம் செய்ய வேண்டிய து ஆ என்ன...
யா அல்லாஹ் எங்கள் தாய்மார்களும் மனைவி மக்களும் இப்படியானதொரு வாழ்வை வாழ அருள் புரிவாயாக. மறைந்த பெருமகளாரின் நல் அமல்களை பொருந்திக் கொள்வாயாக.. அவர்கள் பாவங்களை பொறுத்தருள்வாயாக. அவர்கள் மண்ணறையை சுவர்க்க பூங்காவாக்கி வைப்பாயாக. அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பாயாக. அவர்கள் சந்ததிகள் அவர்கள் விட்டுசென்ற நல் அமல்களை நற்குணங்களை தன்னகத்தே கொண்டு வாழ செய்வாயாக ஆமீன்.
என்னதான் நீண்ட வயதுகள் வாழ்ந்தாலும் தன்னை ஈன்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தாயை இழந்து வாடும் மக்களின் வலியும், ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் உறவுகள் இருந்தாலும் வேர் போல் நின்று தன்னை தாங்கி பிடித்த இல்லாளை இழக்கும்போது அந்த கணவனுக்கு ஏற்படும் வலியும் அதை அனுபவிப்பவர்களுக்குதான் தெரியும்.
மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுப்பானாக. அவர்கள் துயரில் நாங்களும் பங்குகொள்கிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross