Re:... posted byS.K.Salih (Kayalpatnam)[27 January 2016] IP: 180.*.*.* India | Comment Reference Number: 42955
என் மரியாதைக்கும், பாசத்திற்குமுரியவரும் - என் தந்தையுடன் இணைந்து பல பொதுப்பணிகளை ஆற்றியவருமான ஃபாஸீ மாமாவின் மனைவி... (இப்பேரிழப்பைத் தாங்கும் ஆற்றலை கருணையுள்ள அல்லாஹ் அவர்களுக்கு வழங்க வேண்டும்...)
1988 - 1989இல் திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியில் நான் திருக்குர்ஆன் மனனம் செய்த காலகட்டத்தில், எனது சீனியராகவும் - நல்ல நண்பராகவும் - அப்போது சிறுவனாக இருந்த எனக்கு பொறுப்பாளர் போலவும் திகழ்ந்த என் பாசத்திற்குரிய நண்பர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல்ஹஸன் நுஸ்கீ ஃபாஸீ அவர்களின் தாயார்...
மார்க்கப் பற்றுள்ள நல்ல குடும்பத்துப் பெண்மணி... நமதூர் பெண் சமூகத்திற்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் மர்ஹூமா அவர்கள்...
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross