தற்காலத்திற்குப் பொருத்தமான கட்டுரை! posted byS.K.Salih (Kayalpatnam)[01 February 2016] IP: 180.*.*.* India | Comment Reference Number: 43000
இன்றைய காயல்பட்டினம் சூழலை உணர்த்தும் மிகப் பொருத்தமான கட்டுரை.
மோட்டார் வாகனத்தை துவக்கத்தில் ஓட்டத் துவங்கிய பெண்கள் சொன்ன வாக்குமூலம்: “எங்க வீட்டுல ஆம்பளை இல்லே... ஆட்டோக்கு காசு கொடுத்துட்டுப் போக எனக்கு வழியில்லே... வேற என்ன செய்ய?”
தம் சூழலைக் காரணம் காட்டி இவர்கள் மோட்டார் வாகனத்தை ஓட்டத் துவங்கினார்கள்... அதைப் பார்த்த மற்ற மகளிரோ, “அவள் ஓட்டுறாளே... நானும் ஓட்டப் போறேன்...” என்று துவங்கிவிட்டார்கள்.
மாமாவுடன் நானும் ஒன்றாக சாலையில் நடந்துகொண்டிருந்தபோது, ஒரு பெண் சாலை விதிகளை மதிக்காமல் படு வேகமாக வாகனத்தை இயக்கிச் சென்றதைப் பார்த்தபோது, “இவளுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, நடு ரோட்டுல விழுந்து கிடக்கும்போது அது எவ்வளவு கேவலமாக இருக்கும்?” என்று நாங்கள் கூறிக்கொண்டோம்.
நம் ஊர் மக்களின் மனப்பதிவில் மார்க்கம் என்பதெல்லாம் இரண்டாம் நிலைதான்! நல்லதோ, கெட்டதோ... யாராவது முதலில் துவக்க வேண்டும்; அவ்வளவுதான்! அதைப் பார்த்து மற்றவர்களும் செய்யத் துவங்கிவிடுவார்கள்.
மக்கீ நூஹுத்தம்பி மாமாவின் கருத்தும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றே! இன்று உம்றா பயணம் இபாதத்தாக நிறைவேற்றப்படுவதில்லை. ஒரு க்ரூப் பிக்னிக் போன்றுதான் உள்ளது. இலங்கையைப் பீடித்திருந்த இந்தப் போக்கு தற்போது தமிழகத்திலும் வேரூன்றியுள்ளது.
உடல் வலிமை, பணம் எல்லாம் இருந்தும் - மஹ்ரமான ஆண் துணை இல்லை என்றால் ஹஜ் கூட கடமையில்லை என்கிறது நம் மார்க்கம். ஆனால் இன்று ஹஜ்ஜுக்கும், உம்றாவுக்கும் செட்டப் மஹ்ரம்களை உருவாக்கிக் கொண்டு இரு நாட்டு அரசுகளையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்...
ஆனால், “இவ்வளவு அவதிப்பட்டு அங்கு செல்வது அல்லாஹ்வின் இல்லத்திற்குத்தானே...? அவன்தானே மஹ்ரமில்லாமல் வராதே என்று சொன்னான்??” என்பதை வசதியாக மறந்துவிட்டோம்.
ஒவ்வொரு தனி மனிதனும் தன் கட்டுப்பாட்டிலுள்ள வீட்டாரை சரி செய்தால் மட்டுமே இன்றைய சூழலில் ஊர் சரியாகும். மற்றபடி, யார் சொன்னாலும் (அது ஆலிம்களின் உரைகளாகட்டும்! கட்டுரைகளாகட்டும்!!) அது விழலுக்கிரைத்த நீராகத்தான் முடியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross