أللهم اغفر له وارحمه posted byM.S.Kaja Mahlari (Singapore)[01 March 2016] IP: 118.*.*.* China | Comment Reference Number: 43266
ஜனாப் முஹம்மத் அலி ஹாஜி அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலைப் பட்டேன் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
பொதுகாரியங்களுக்கு முன்னின்று செய்வதிலும் , அந்த காரியங்களுக்கு உடல் உழைப்பு , பொருளாதார ஒத்துழைப்பு என இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு சீதேவி மனிதரை இழந்து இருப்பது அவர்களின் குடும்பம் மாத்திரம் அல்ல! நம் ஊர் மக்கள் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு மாபெரும் பேரிழப்பாகும் .
எல்லாம் வல்ல அல்லாஹ் அவனுக்காகவே "இக்லாஸ் " எனும் தூய எண்ணத்தில் ஈடுபட்டு அவர்கள் ஆற்றிய பொதுநல சேவைகளை பொருந்திக்கொண்டு அதற்க்கான கணக்கற்ற நற்கூலியை அன்னாருக்கு வழங்கிடுவானாக!
அன்னாரை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தார் ,உற்றார் ,உறவினர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக ! அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரியப்படுத்துகிறேன் !
கிருபை உள்ள ரஹ்மானான அல்லாஹ் அவர்களின் குற்றங்கள் ,குறைகள் யாவற்றையும் பொறுத்தருளி , அவர்களின் கப்ரை ஒளிமயமாக்கி ,விசாலமாக்கி , சுவன பூன்சோலையாக்கி ,நாளை மறுமையில் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தில் அண்ணல் நாயகம் முஹம்மத் முஸ்தபா (ஸல் லல்லாஹு அலைஹி வ சல்லம் ) ஏனைய நபிமார்கள் , சுகதாக்கள் ,சிட்தீகீன்கள்,சாளிஹீன்கள் ,வலிமார்கள்
,நல்லோர்களோடு குடியமர நல்லருள் புரிவானாக ! ஆமீன் !!!!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross