Re:... posted byMauroof (Dubai)[26 March 2016] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43410
கடந்த 5 வருடங்களாக சட்டமன்றத்திலும் பொது மேடைகளிலும் "அம்மா" புகழ்பாடி பின்னர் மக்கள் நலக் கூட்டணிக்கும் சென்று பின்னர் வெளியேறி மீண்டும் "அம்மா" புகழ்பாட அனுமதி வேண்டி காத்திருந்து ஒருவேளை அனுமதி கிடைக்காமேலேயே போனால் என்னாவது என்ற ஐயத்தில் தற்போது கலைஞரிடம் ஐக்கியமாகியிருக்கும் மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது பாராட்டிற்குரியது.
உங்களிடமிருந்து பிரிந்து மனித நேய ஜனநாயக கட்சி என்ற ஒன்று உருவாகாமல் இருந்திருந்தால் உங்களின் பலம் இன்னும் உறுதி மிக்கதாக இருந்திருக்கும். என்ன செய்வது?.
உங்களுக்காக ஒதுக்கப்படும் தொகுதிகளில் வெற்றி வாகை சூடி தமிழக சட்டமன்றத்தில் தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களின் நல வாழ்விற்காக உங்களது குரல்கள் ஓங்கி ஒலிப்பதோடு தத்தமது தொகுதிகளின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி அனைத்து தரப்பு மக்களின் பேராதரவைப் பெற்று புதியதோர் சகாப்தம் படைத்திட வாழ்த்துகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross