Re:... posted byMauroof (Dubai)[26 March 2016] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43409
கடந்த சட்டமன்றத் தேர்தல்களிலெல்லாம் ஓரிரு தொகுதிகள் மட்டுமே அதுவும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போதோ கலைஞரின் இதயத்தில் மட்டுமே இடம் ஒதுக்கப்பட்டு வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இம்முறை 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது.
ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தேர்தலில் "ஒதுக்கப்பட்டத்" தொகுதிகளாகி விடாமல் பேராசிரியரும் ஏனைய முன்னணித் தலைவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஒதுக்கப்படும் 5 தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெரும் வெற்றி பெற்று தமிழக சட்ட மன்றத்தில் தமிழகத்தில் ஒடுக்கப்படும் வஞ்சிக்கப்படும் ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகத்தின் அவலங்களைக் களையும் வகையில் குரலெழுப்பவும், தத்தமது தொகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்காக உளத்தூய்மையுடன் செயல்பட்டு அனைத்து தரப்பு மக்களின் பேராதரவு பெற்று புதியதோர் சகாப்தம் கண்டிட வாழ்த்துகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross