இணையதளத்தைக் காட்டிலும் இளந்தளிர்கள் இணையில்லாத பலம்! posted bySheikh Abdul Qader (Riyadh)[03 April 2016] IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 43435
ஒரு கொஞ்சும் மழலை கெஞ்சிக்கேட்கும் நிலைக்குத்தள்ளப்படுவதை பிரதிபலிக்கிறது இந்தப்பதிவு .
"நாம் குழந்தைக்களுக்காத்தேடுகிறோம்
நம் குழந்தைகள் நம்மைத்தான் தேடுகிறதென்பதைமறந்து".
தேவையான கட்டுரை நம்மில் எல்லோரும் படித்து உணரவேண்டிய விஷயம். ஏனென்றால் பெரும்பாலும் நம்மில் ஏதாவது தேவையில்லாத ஒன்றுக்கும் உதவாத பலபாஷைகளில் பலமுறைவந்த புளித்துப்போன விஷயங்களை ஏதாவதொரு அட்டு ஊடகத்தில் ஆராய்ந்துகொண்டிருப்போம் அந்தநேரம் குழந்தைவந்து உம்ம,வாப்பா,மாமா,காக்கா,ராத்தா இந்தக்கண்க்கு புரியல கொஞ்சம் சொல்லித்தாவேன் என்றுகெஞ்சும்போது ஸ்கூல்ல மிஸ்கிட்டே சொல்லிக்கேக்கவேண்டியதுதானே இங்கவந்து ஏன்உயிரே எடுக்கிறேன்னு குழந்தைக்கிட்டே எரிந்துவிழுதல் இதுபெரும்பாலும் சகஜமாக நடக்கிறது.
சிலகுழந்தைகள் தூக்கத்தில் பற்களைக்கடிக்கும் அதற்குகாரணம் இப்படி ஆதரவுஇல்லாமல் பள்ளியிலும் வீட்டிலும் ஒதுக்கப்படுவதே காரணம்.
பிள்ளையின் மனதில் இப்படியொருபயமிருக்கும் நாளை மிஸ்கிட்டே இந்த சம்ம எப்டி சால்வ்பண்ணிக்காட்டுவேன்.
"கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது அன்புப்பேரக்குழந்தைகள் ஹசன்,ஹுசைன் ரழியல்லாஹு தஆலா அன்ஹுமா நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள்மீது சுஜூதிலுருக்கும்போதும் ஏறிவிளையாடுவார்களாம் அந்தவேளையில் எழுந்து அமர்வுக்குவரமாட்டார்களாம் அப்பொழுது அன்னையர்த்திலகம் ஃபாத்திமா ரழியல்லாஹு த ஆலா அன்ஹா அவர்கள்வந்து குழந்தகளை இறக்கிவிடுவார்களாம் அதன்பிறகே தொழுகையின் மறு நிலைக்குவருவார்களாம் இறைவனின் சன்னிதானத்தின் போதே குழந்தைகளுக்கு இவ்வளவு உரிமைகொடுத்து வாழ்ந்துகாட்டியிருக்கிறார்கள் நமது நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் எவ்வளவு அழகிய வரலாறு ஆனால் நாம் நிதானம் இழந்தே பழகிவிட்டோம் பிறகு நமக்குஏது சந்நிதானம்.
"தானத்தில் சிறந்த தானம் நிதானம்"
"முந்தைய உம்மு நுமைரா அவர்களின் உம்மா ஸே மாஷா அல்லாஹ்....! கட்டுரையில் உம்மாவிற்கெல்லாம் மகன்தான் செல்லம்"
"இந்த எஸ்.ஐ.புகாரீ அவர்களின் வாப்பா...! கொஞ்சம் பேசக் கூடாதா...?கட்டுரையில் வாப்பாவிற்கெல்லாம் மகள்தான் செல்லம் எல்லாபடங்களுமே பெண்குழந்தைகள்தான்"
இது ஒருதலைபட்சமா இல்லை உறவின் வெளிச்சமா அல்லாஹ்வுக்கே வெளிச்சம்..
"இந்த நவீன தொடர்பாடல் வசதி பல்வேறு நன்மைகளை இந்தச் சமூகத்திற்கு வழங்கி இருக்கும் அதே வேளை தூர இருப்பவர்களை கிட்டேயும் , நெருங்கி இருப்பவர்களை தொடர்பு எல்லைக்கு வெளியேயும் தள்ளியிருக்கிறது . இது நவீன சாதனங்களின் பிழை அல்ல . மாறாக நேரத்தை, நவீனத்தை, முறையாக கையாளத் தெரியாமல் தினறும் அறியாமையின் விளைவு."
மாஷா அல்லாஹ் ஆசிரியரின் மேலே அடைப்புக்குளுள்ள இந்தவரிகள் என்னைமிகவும் கவர்ந்தவரிகள்.
இன்ஷா அல்லாஹ் தொடரட்டும் கருத்துடன் கவரும் வரிகள் ஜஃஜாக்கல்லாஹ் க்ஹைர். இறைவன் மிகப்பெரியவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross