Re:...குழந்தைகள் posted bymackie noohuthambi (kayalpatnam )[03 April 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43434
உம்மா.. ஸே.. மாஷா அல்லாஹ்...என்ற சகோதரி உம்மு நுமைராவின் கட்டுரையை தொடர்ந்து இந்த ஆக்கம் வெளியாகியுள்ளது. அது ஒரு தாயின் உணர்வுகளின் வெளிப்பாடு. இது ஒரு தொழிலதிபரின் இதயம் பேசுகிறது. விளம்பரங்களை எவ்வளவு உன்னிப்பாக கவனித்து வருகிறார் இவர் என்பது தெளிவாகிறது .
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.அதனதன் கதைகளை. ஒவ்வொருவருக்குள்ளும் இந்த குழந்தைகளின் தாக்கம் இருக்கவே செய்கிறது. ஆனாலும் இந்த வலைத்தளங்கள் முக நூல்கள் அவற்றை மழுங்கடிக்க செய்து விடுகிறது என்பதே உண்மை.
உறவினர்களை வாருங்கள் என்று முகம் மலர அழைக்க முடியவில்லை. முகநூலில் முகம் புதைத்துக் கொண்டிருக்கிறோம். தொலைக் காட்சியிலே தொடர் நிகழ்ச்சி பார்க்கும்போது முக்கியமான நபர்களைக் கூட நாம் கண்டு கொள்வதில்லை.
குழந்தைகள்...அல்ஹம்து லில்லாஹ். அவர்களின் பேச்சைக் கேட்பதற்கும் பிஞ்சு மொழிகளை பகிர்ந்து கொள்வதற்கும் கூட அல்லாஹ்வின் கருணை வேண்டும்.
எனது பேத்தி 2 ம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு அவளது தாய் உணவு வூட்டுகிரார்கள் மார்க்கக் கல்வி ஊட்டுகிறாள். பள்ளி பாடங்களையும் ஓட்டுகிறார்கள். அப்பா பாருங்கள் எனது GRADE SHEET என்று திறந்து காட்டினால். எல்லாமே A GRADE அள்ளி அணைத்துக் கொண்டு முத்தமிட்டு விட்டு அதிக பிரசங்கி தனமாக ஒரு வார்த்தை சொன்னேன். புள்ளே, உனது உம்மாவோடு நீ எப்போதும் அன்பாக இருக்க வேண்டும். கோபப் படக் கூடாது..அவள் படித்து தந்ததால்தான் நீ இவ்வளவு GRADE எடுத்திருக்கிறாய் என்றேன்.
உடனே அவள் அடுத்த வார்த்தை உதிர்த்தாள்,''என்ன அப்பா சொல்றியோ உம்மா என்னதான் படித்து தந்தாலும் நான்தானே பள்ளிக் கூடத்தில் போய் எழுத வேண்டும் உம்மாவா வந்து எழுதுவா?''..நான் ஆடிப் போனேன். என்ன அழகாக பேசுகிறாள்...விவரமாக, நெற்றி யடி என்பார்களே அப்படி. மாஷா அல்லாஹ்.
கடற்கரையில் ஒரு நாள் ஒரு வயது முதிர்ந்தவர் உட்கார்ந்து கொண்டு அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தார். என்ன சுகமாக இருக்கிறீர்களா என்று என்னை அறிமுகம் செய்து கொண்டு என்ன அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் யாரை தேடுகிறீர்கள் என்றேன். ஒன்றுமில்லை. இங்கு எவ்வளவு குழந்தைகள் ஓடி ஆடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் பெற்றோருடன் கொஞ்சி குலாவிக் கொண்டு, எனக்கு அந்த கொடுப்பினை இல்லாமல் போய் விட்டதே என்று ஓர் ஏக்க பெருமூச்சு விட்டார். எனது கண்களில் நீர் கசிந்து விட்டது. அல்லாஹ்வுடைய நாட்டம் கவலைப் படாதீர்கள் என்று சமாதானம் சொன்னேன்.அந்த வலி 70 வயதிலும் அவரை பாடாய் படுத்துகிறது...
பாரா முகமாய் இருக்கும் பெற்றோர்களே ஜாக்கிரதை நமது திருமணத்துக்கு எவ்வளவோ நண்பர்கள் உறவினர்கள் விலை உயர்ந்த பொருட்களை அன்பளிப்பாக அளிப்பார்கள். பெருமையுடன் பெற்றுக் கொண்டு நன்றி சொல்வோம். அல்லாஹ் நமக்கு திருமண அன்பளிப்பாக தருவது இந்த மழலை செல்வங்கள். எத்தனை பேர் அவனுக்கு நன்றி சொல்கிறோம்.
என்னவோ திருமணம் முடிந்து பாத்து மாதங்களில் குழந்தை வந்து விடும் வளர்ந்து விடும் வாழ்ந்து விடும் என்று நினைத்துக் கொள்கிறோம். அல்லாஹ்வின் மாபெரும் கருணை அது.தனிப் பெரும் கொடை அது. அதை அன்புடன் வருடுவோம். அவர்களுடன் உறவாடுவோம்.அவர்களுக்காக நேரம் ஒதுக்குவோம்.
குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross