உதாசீனப்படுத்தியும் பிரித்தும் விளையாடுவதே பெரியஅரசியல் கட்சிகளின் கொள்கைகள் அந்தக்கட்சிகளின் இந்தவளர்ச்சிக்கு நாம்தான் உரமிட்டவர்கள் அதை அவர்கள் விரைவாகவேமறந்து உதாசீனப்படுத்துகிறார்கள் கடந்த கால அரசியலில் இப்படி உதாசீனப்படுத்தப்பட்ட ஒருகட்சி இன்றுவளர்ந்துவிட்ட பின்னால், அக்கட்சியின்பின்னால் மடியேந்திபோயும் பிச்சைகிடைக்காத அனுபவம்கண்டும் திருந்தவில்லை. மீண்டும்பாடம் படிக்கவேண்டும் அல்லது புகட்டவேண்டும் அதற்கு நமக்குள் ஒற்றுமை வரவேண்டும் ஒரு நிழல்படம் விஸ்வரூபத்திற்காக நாமெடுத்த விஸ்வரூபமே நமக்கு அன்றுவெற்றியைத்தந்தந்தது.
ஏன் நமது நிஜவாழ்க்கைக்கு அந்த விஸ்வரூபம் எடுக்கக்கூடாது ஒருவெற்றிகண்ட அனுபவமிருக்கிறதுதானே அந்தவெற்றியை ஏன்தக்கவைத்துக்கொள்ளக்கூடாது?
அல்லாஹு அக்பர் என்றுதானே தக்பீர்கட்டுகிறோம் ஏன் அந்த தக்பீரை இந்தவிஷயத்தில் ஒன்றாக நின்றுகட்டக்கூடாது?
கேரளாவில் முஸ்லிம்கள் நல்லமுறையில் அரசியல் வியூகங்களை கையாள்கிறார்கள் அதனால் வெற்றிகனி எப்போதும் அவர்கள்கையிலேயே இருக்கிறது இது நமக்குக்கையாலாகாததா? கொள்கைகள் எப்படியுமிருக்கட்டும் அந்த இறைவனுக்கேதெரியும் யார்யார் அவனுடைய அடிமைகளென்று அதை அவன்தீர்மானிப்பான் நமதுகையில் என்ன இருக்கிறது?
ஷைத்தான் இறைவனிடமே சவால்விட்டவன் உனது அடிமைகளின் ஒற்றுமையைக்குலைப்பேனென்று ஷைத்தான் நமக்கு என்றுமேபாதகமானவந்தான் நாம் அவனுக்குசாதகமாகலாமா?
இன்னும் காலம் நம்கையில்தானிருக்கிறது நல்லமுடிவு எடுப்போம் இன்ஷா அல்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் முதலில் கடிவாளத்தைக்கையில்பிடிப்போம் பிறகு விதிக்கு நாம்விதிவைப்போம்
அல்லாஹ் வெற்றியைத்தரப்போதுமானவன்
அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் உங்களின் SDPI கட்சியின் நியாயமான கோரிக்கைகளுக்கு விரைவில் வெற்றிகிடைக்க வாழ்த்திப்பிரார்த்திக்கிறோம் ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross