Re:...அலாவுதீனும் அற்புத விளக்கும் posted bymackie noohuthambi (kayalpatnam )[11 May 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43719
அலாவுதீனும் அற்புத விளக்கும்...
நான் சிறிய வயதில் பார்த்த திரைப் படமா அல்லது படித்த ஒரு நூலா என்பது ஞாபகம் இல்லை. இருந்தாலும் அன்பின் அலாவுதீன் அவர்கள் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும்போது இன்றைய நாளிதழ் ஒன்றில் வெளிவந்துள்ள நம் தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்காக களம் இறங்கியுள்ள அல்லது நமது தலைவர்களால் களம் இறக்கப் பட்டுள்ள வேட்பாளர்களின் பொருளாதார நிலை பொதுவாழ்வில் அவர்களின் நிலை பற்றிய அறிக்கை வந்துள்ளதை படித்தேன். திருத்தவும் முடியாது திருந்தவும் முடியாது என்ற எல்லையை தாண்டி போய்க் கொண்டிருக்கிறோம்.
ippothu .com இணையதளத்தின் பீர்முஹம்மத் அவர்களை நேர்காணலில் நீங்கள் கேட்ட ஒரு அரசியல் மாட்டரு பற்றிய கேள்விக்கு அவர் விடை சொல்ல முனைந்தபோது எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அவரை பதில் சொல்லவிடாமல் தடுத்ததே...அது எந்த தேவதையின் குரலோ..அதுதான் இந்த ஜனநாயக நாட்டின் குரல்....
தொடர்ந்து படியுங்கள்....
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 553 கோடீஸ்வரர்களும், குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நபர்கள் 283 பேரும் போட்டியிடுவதாக ஆய்வு அறிக்கை தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
இதுகுறித்து "ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு' (ஏ.டி.ஆர்.) என்று நிறுவனம் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், 3,776 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில், முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் 1,107 பேர். அவர்களில் 997 பேர் அளித்த பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தோம்.
அதில், 553 பேர் ரூ.1 கோடி மற்றும் அதற்கும் அதிக மதிப்புடைய சொத்துகள் இருப்பதாக பிரமாணப் பத்திரங்களில் குறிப்பிட்டுள்ளனர். அவர்களில், அதிமுகவைச் சேர்ந்தவர்கள் 156 பேர். திமுகவைச் சேர்ந்தவர்கள் 133 பேர் ஆவர். காங்கிரஸில் 32, பாஜகவில் 64, பாமகவில் 72, தேமுதிகவில் 57 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர்.
2 பேருக்கு எந்தச் சொத்துமில்லை!: 997 வேட்பாளர்களின் சராசரி சொத்து விகிதம் ரூ.4.35 கோடி. 2 பேர், தங்களுக்கு எந்த சொத்தும் இல்லை என்று பிரமாணப் பத்திரத்தில் அறிவித்துள்ளனர்.
283 பேர் தங்களுக்கு எதிராக குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
அவர்களில், திமுகவில் 68 பேரும், பாமக 66, அதிமுக 47, தேமுதிக 41, பாஜக 26, காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 8 பேரும் போட்டியிடுகின்றனர். 28 தொகுதிகளில், முக்கிய கட்சிகளைச் சேர்ந்த 3 அல்லது அதற்கு அதிகமான வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
114 வேட்பாளர்கள், தங்களது பான் அட்டை விவரங்களையும், 284 பேர் வருமானவரி தொடர்பான விவரங்களையும் வெளியிடவில்லை. 454 பேர் தங்களது கல்வித் தகுதியாக, 5 முதல் 12 ஆம் வகுப்புவரையும், 488 பேர் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேலும் படித்திருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றனர். 6 பேர், சிறிதளவே படிப்பறிவு இருப்பதாகவும், 6 பேர் படிப்பறிவு இல்லையெனவும் தெரிவித்துள்ளனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross