>>>ஆம்...! நமதூர் அருகில் ஆலையின் அமிலக் கழிவு, நச்சு காற்று உயிருக்கு அச்சுறுத்தலாக காயல் மற்றும் சுற்று வட்டார ஊர்களின் வாழ்வாதாரம் நோயாக மாறி “கருவறையில் இருந்தே எதிர்ப்பு சக்தி குன்றி, குறைந்து பல நோய்களுக்கு தள்ளப்படும் அவலம்.” பல ஆண்டாய் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
இந்த ஆலைக்கு எதிராக நமது தொகுதி எம்.எல்.ஏ. எம்.பி. இதுவரை இது சம்மந்தமாக ஏதேனும் அறிக்கையோ, ஆலை இடமாற்ற முயற்ச்சியோ மேற்கொண்டார்களா? ஐந்தாண்டுக்கு ஒருமுறை வாக்கு வங்கிக்கு வாசல்படி வருபவர்களிடம் நாம் இந்த கோரிக்கைகளை எழுத்து பூர்வமாக உறுதிதர எப்போதாவது கட்டாயப்படுத்தினோமா? நீதி மன்றத்திற்கு சென்று நாம் தோல்வி கண்டதுதான் தீர்வாக இருக்கிறது.
ஆக! இந்த தேர்தலை ஒட்டுமொத்த மக்களும் புறக்கணிக்க வேண்டும். 'எதையுமே சிந்தித்து செய்தால் நமக்கு வெற்றி கிட்டும்; எதையுமே செய்து விட்டு சிந்தித்தால் நமக்கு அனுபவம் மட்டும் தான் கிடைக்கும்". <<<*
நாம் சிறுவர்களாக இருந்த போது பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற கதையை கேட்டிருப்போம். அக்கதையிலிருந்து பாடம் கற்றுக்கு கொண்டு இன்று நாம் நமதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விஷம் கக்கிக்கொண்டிருக்கும் DCW என்ற நச்சு நாகத்திற்க்கு சாவுமணி அடிக்க MP, MLAஎன்ற அரசியலே சரியான மருந்தாகும். நமதூர் மற்றும் சுற்றுவட்டாரத்தினர்கள் மீது அக்கறையுள்ள சமூகநலவான்களான *நமதூரைச் சார்ந்தவர்களையே வரும் தேர்தல்களில் வேட்பாளர்களாக நாம் நிறுத்த வேண்டும்.* உடனே வெற்றி கிடைக்க சாத்தியமில்லைதான் என்றாலும் தூர நோக்கோடு சிந்தித்தால் பல தோல்விகனுக்குப்பின் நம்காயலர் ஒருவர்
நம் தொகுதி MP, MLA வாக வருவது சாத்தியமே. கடந்த காலங்களில் நம் தொகுதியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் DCW வினால் நமக்கு ஏற்ப்படும் தொந்தரவுகளை மட்டும் கண்டுகொள்ளவில்லை. அதை தவிர்த்து ஒரளவு நமக்கு நன்மைகள் செய்த நல்லுல்லங்களே. எந்த நன்மைகளையும் பயனாளிகள் பயடைய வேண்டுமென்றால் அவர்களுக்கு ஆரோக்கியமான உடல் நலம் வேண்டும். அந்த ஆரோக்கிய உடல் நலம் என்பது அதிகமான காயலர்களுக்கு கடந்த காலங்களில் DCW வின் பாதரச கழிவு காயல் கடலில் கலந்ததாலும், இன்றும் அதன் நச்சு புகை விடியற்காலைக்கு முன்னமே காற்றில் கலந்து விடுவதாலும் ...
(MAY 06-2016 . 5.25 AM இல் பயணிக்கும் போது நான் கண்னால் கண்டது - அப்புகை அடர்த்தியாக பயணிக்கும் மேகக்கூட்டத்தை போல் DCW விலிருந்து கிழக்கு நோக்கி சற்று தென்பாகம் சறிந்து காயலை நோக்கிப் பயணித்தது.) ...காயல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் புற்றுநோய், மூச்சுத் திணறல், தோல் நோய்கள் பல நோய்களுக்கு ஆளாகியிருப்பவர்கள் அதிகமானோர் என்பதெல்லாம் நம்மில் மிகுதியானோர் அறிந்ததே.
நமதூரில் அரசியல் கட்சிகளில் ஈடுபாடோடு இயங்கும் கட்சி தொண்டர்கள் பலருக்கு தாம் தாம் சார்ந்த கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் , அதன் மூலம் நமதூருக்கு நன்மைகள் பல செய்ய வேண்டும் என்ற நன்னோக்கும் இருக்கின்றது. இந்த தொண்டர்களுக்கும் DCW வின் நச்சு கழிவுகளிருந்து நமதூருக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நன்னோக்கமும் இறுக்கத்தான் செய்கின்றது. ஆனால் கட்சிகளின் மேலிடங்கள் ஏனோ DCW விவகாரத்தில் மவுனம் காக்கின்றது என்பதை நம்மில் பல தொண்டர்கள்புறிந்து கொள்ளவில்லை.
இதற்க்கு முன்னால் நம்மால் வெற்றிபெற்று
MLA, MP பதவிகளை பெற்வர்கள் நமதூர் மற்றும் சுற்றுவட்டார மக்களின் நோயற்ற வாழ்விற்க்கும், மாசற்ற தூய்மையான சுவாச காற்றிற்க்கும் ஆதரவாகவும், DCW வினால் பறப்பட்டும் நச்சு புகைக்கு எதிராகவும் குரல் கொடுக்காதவர்களுக்கு நாம் ஏன் ஓட்டு போட வேண்டும்?
பிறநாட்டு விஷம் நிறைந்த கழிவுகளை சோமாலிய நாட்டு கடல் எல்லையில் கொட்டியதன் விளைவாக சோமலியர் ளுக்கு அவர்களுடைய முக்கிய வாழ்வாதாரமான மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டதும், அந்த விஷக் கழிவுகளின் மூலம் நோய்வாய்பட்டு எலும்பும், தோலுமாக பறிதாபாமான நிலையில் பாற்க்கின்றோமா அதே நிலை நமதூரில் இன்னும் 100 வருடம் கழிந்தால் நமது பேரக்குழந்தைகளுக்கு வந்து விடக் கூடாது என்றால்
நமது தொகுதிக்கு நமதூரினரை வரும் காலங்களில்
MP, MLA வாக ஆக்குவோம். பிற கட்சிகளிருந்து பிறிந்து நமது தொகுதிக்கு நமதூரினரை MP, MLA வாக ஆக்க ஒன்று படுவோம் ஒன்றுபடுவோம். நாம் ஒன்றுபட்டால் நிச்சயமாக அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான்.
அர்ரஹ்மானே! எங்களுக்கு
இந்த வெற்றியை தருவாயாக!ஆமீன்.
இவ்வாக்கத்தின் சகோதரர் அன்பின் அலாவுதீன் அவர்களுக்கும், இதனை வெளியிட்டுள்ள
இவ்விணையதள சகோதரர்களுக்கும்
ஜஸாகல்லாஹு க்ஹைரா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross