اللهم اعفر له وارحمه posted byM.S.Kaja Mahlari (Singapore)[15 May 2016] IP: 118.*.*.* China | Comment Reference Number: 43794
மரணம் என்பது அனைவருக்கும் உண்டு என்று நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டு இருந்தாலும் இப்படியெல்லாம் நிகழ்வது நினைத்து மனது மிகவும் சஞ்சலம் அடைகிறது . எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளை என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ????
பொதுவாகவே இரவு நேர தனியாக வாகனப் பயணங்களை தவிர்ப்பது கட்டாயமாகும் . நிறைய அசம்பாவித சம்பவங்கள் நடந்திருப்பது இப்படிப்பட்ட பயணங்கள் தவிர்க்கப் படவேண்டும் என்பதையே காட்டுகிறது . இதனை கவனத்தில் எடுத்து செயல்படுவோமாக !!!
மர்ஹூம் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் கடையநல்லூரிலிருந்து ஊருக்கு வரவிருந்த நிலையில், நாகர்கோவில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள தன் உறவினருக்கு குருதி தேவைப்படுவது அறிந்து, உடனடியாகக் கிளம்பிச் சென்று, குருதியும் கொடுத்து, திரும்பி வரும் வழியில் இந்நிகழ்வு நடந்திருக்கிறது...
ஆக, தன் வாழ்வின் கடைசிப் பகுதியையும் பிறர் நலனுக்காகச் செலவழித்து, ஷஹீத் எனும் நிலையில் தன்னை இவ்வுலகை விட்டும் மறைத்துக்கொண்டார்.
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
விபத்தில் காலமான இவருக்கு, ஷஹீதுக்குரிய நற்கூலிகள் அனைத்தையும் - குறிப்பாக, கேள்வி கணக்கின்றி சுவனம் நுழையும் நற்பாக்கியத்தை கருணையுள்ள அல்லாஹ் வழங்கியருள்வானாக... அத்துடன் காயம் ஏற்பட்ட சகோதர்களுக்கும் பரிபூர்ணமாக சரீர சுகத்தை கொடுத்தருள்வானாக !!! ஆமீன் !!!!
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவரது தந்தை பாசத்திற்குரிய - மரியாதைக்குரிய பாளையம் ஹபீப் காக்கா, சிறிய தந்தையரான பாளையம் ஹஸன் சார், பாளையம் செய்மீன் காக்கா, உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross