Re:...நேர்மை -அது அவரவர் உள்ளத்திலிருந்து வெளிவரவேண்டும் posted bymackie noohuthambi (kayalpatnam )[15 May 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43795
தேர்தல் அதிகார் திரு ராஜேஷ் லக்கானி அவர்கள் பேட்டியை பார்த்தவர்களுக்கு ஒரு செய்தி புரியும் .
முன்னெப்போதையும் விட திரு சேஷன் அவர்கள் ஆரம்பித்து வைத்த தேர்தல் கமிஷனுக்குள்ள வானளாவிய அதிகாரம் இப்போது இன்னும் அதிகமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ஆனாலும் கையும் களவுமாக பணம் கொடுப்பவர்களை பிடித்தாலும் அவர்களுக்கு உடனடியாக spot fine போடுவதற்கு சட்டத்தில் இடமில்லை. எல்லா புகார்களையும் கேட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப் படி நீதிமன்றம் சென்று வழக்கு விசாரணை முடிய 5 ஆண்டுகள் முடிந்து அடுத்த தேர்தல் வந்து விடுகிறது.
இப்போது கிடைத்த தகவல்படி அவர் சொல்கிறார். எங்காவது பணப்பட்டுவாடா செய்வது அறிந்து எங்களுக்கு sms அனுப்பினாலோ mobile தகவல் தந்தாலோ கூடிய அளவும் 15 நிமிடங்களில் எங்கள் பறக்கும் படை அந்த இடத்துக்கு வந்து விடும். அந்த 15 நிமிடத்துக்கும் முன்னால் மின்வெட்டி மறையும் அவகாசத்தில் அந்த பண பட்டுவாடா நடந்து முடிந்தால் நாங்கள் என்ன செய்யமுடியும் என்று கேட்கிறார்.
நான் நேற்று ஒரு நண்பருக்கு போன் செய்தேன். எங்கிருக்கிறீர்கள் என்று கேட்டேன். நான் ஏரலில் இருக்கிறேன் நாளை ஆத்தூருக்கு போகணும் ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுக்கிறார்களாம். அதையும் வாங்கிட்டு அடுத்தநாள் ஓட்டும் போட்டு விட்டு வரணும் என்று சர்வ சாதாரணமாக சொல்கிறார். மிக்சி கிரைண்டர் மின்விசிறி இலவசமாக வாங்கும் ஒருவரை கேட்டேன் நீங்கள்தான் வசதியுள்ளவர்களாயிற்றே, இது ஏழைகளுக்கு உள்ளது அல்லவா நீங்கள் வாங்கலாமா என்றேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் என்னை திகைக்க வைத்தது, போ வாப்பா நீ இப்படித்தான் சொல்லுவா, பெரிய ஆலிம்சா மௌலானா தங்கள் வீடே வாங்குறோ, நீ என்ன சொல்றா, நாம கொடுக்குற பணத்தை கொள்ளை அடிச்சிக்கிட்டு இருக்கா, நாம இதை வாங்கினா என்ன அது நம்ம பணம்தானே என்று சொல்கிறார்கள். நீங்கள் அரசாங்கத்துக்கு வருமான வரி, வணிக வரி செலுத்துகிறீர்களா.என்றேன். இல்லை, பஞ்சாயத் போர்டுக்கு வீட்டு வரி தண்ணி வரி மின்வாரியத்துக்கு வரி என்றெல்லாம் கொடுக்கிறோமே என்று அடுத்த பதில் வருகிறது. அது நம்ம ஊர் வளர்ச்சிக்கு, நாம கரண்ட் உபயோகிக்கிறதுக்கு தானே கட்டுகிறீர்கள் என்றேன். ரோடு சரி இல்லை, குடிக்க 5 நாளைக்கு ஒருநாள்தான் தண்ணி வருது, அடிக்கடி கரண்ட் போய்விடுகிறது...இப்படி அடுக்கடுக்காக பதில் சரமாரியாக வருகிறது.அந்த ஆள் என்ன படித்திருக்கிறார்கள் என்று கேட்டால் 8ம் வகுப்பு 10ம் வகுப்பு என்று சொல்கிறார்கள். அப்படியானால் படிக்காத பாமரர்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
மொத்தத்தில் இந்த தேர்தலில் ஓட்டுப் போடுவதெல்லாம் கொள்கை கோட்பாடு நேர்மை நியாயம் தர்மம் என்றெல்லாம் கிடையாது. இலவசம் இலவசம் இலவசம் பணம் பணம் பணம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம்......ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன ....
எப்போது விழிப்புணர்வு வரும்...அது அவரவர்கள் உள்ளத்தில் இருந்து வரவேண்டும்,,,அல்லாஹ்வுக்கு பயப்படுகிற ஈமான் கொண்ட நமக்கே இப்படி என்றால் மற்றவர்களை கேட்கவா வேண்டும்...
5 வருடத்துக்கு ஒரு முறை வரும் தேர்தல் திருவிழா...ஜாலியா பணம் வாங்கி ஜாலியா ஓட்டு போட்டு போய்க்கிட்டே இருப்போம்,,,,வாழ்க இந்திய ஜனநாயகம்
முடியட்டும் திங்கள் கிழமை
விடியட்டும் வியாழக் கிழமை
மலரட்டும் நல்லாட்சி.
ALLAAHUMMA LAA THUSALLITH ALAINAA MANN LAA YAKHAAFUKA VALAA YARHAMNAA.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross