செய்தி: பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள்: எல்.கே. மெட்ரிகுலேசன் மாணவி முஹம்மது ஷாகியா நகரளவில் முதல் மதிப்பெண் - 1155! நகர தேர்ச்சி சதவீதம் - 97.29%!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மக்கி ஆலிம் நினைவுப் பரிசு 2016 posted bymackie noohuthambi (kayalpatnam )[18 May 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43830
வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும்
அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் வல்ல அல்லாஹ்வை சேரும். அல்ஹம்து லில்லாஹ்.
வழக்கம் போல் இந்த வருடமும் + 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் நமதூரிலேயே முதலாவது இரண்டாவது இடங்களை தக்க வைத்துக்கொண்டுள்ள மாணவ மாணவிகள் (இரண்டு பேருக்கு மட்டும்) எங்கள் நெஞ்சமெலாம் நிறைந்து வாழும் எங்கள் அன்பு தந்தை மக்கி ஆலிம் அவர்கள் நினைவாக ''மக்கி ஆலிம் நினைவு பரிசு 2016'' வழங்கி கௌரவிக்க இருக்கிறோம். இந்த பரிசினை எங்கள் வீட்டுக்கே வெற்றியாளர்களை அழைத்து நேர்காணல் செய்து அவர்கள் அனுபவங்களையும் கேட்டறிந்து மகிழ்ந்து அவர்களுக்கு வழங்க இருக்கிறோம். 10ம் வகுப்பு தேர்வு முடிவு வந்தவுடன் அவர்களையும் இப்படி ஒருங்கே அழைத்து வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். அதற்கான நாளை விரைவில் இந்த இணையத்தளத்தில் அறியத்தருகிறோம்.
கணினி வல்லுநர் இன்று கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பவர் BILL GATESஒன்றை சொல்வார். அவர் படித்தது 10ம் வகுப்பும் குறைவுதான் அனால் அவர் சொல்கிறார்.
எனது மக்களுக்கு எனது சொத்துக்களிலிருந்து எதையும் எழுதி வைக்க மாட்டேன் அதே நேரம் அவர்கள் படிப்பதற்கு எந்த எல்லையும் இல்லாமல் செலவு செய்து அவர்களை ஆளாக்க நான் தயங்கமாட்டேன்.
இந்த செய்தி மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்களுக்கு காட்டும் சிக்னல் சமிக்ஞை என்ன?
1. நீங்கள் கோடீஸ்வரனாக வருவதற்கு பெரிய படிப்புக்கள் தேவை இல்லை. நீங்கள் வெற்றிக்கு முனைந்து அதில் தவறி இருந்தாலும் பரவா இல்லை. வேறு துறைகள் உங்களுக்கு திறந்தே இருக்கிறது.
2. பெற்றோர்கள் மக்கள் மதிப்பெண்கள் குறைய வாங்கி இருப்பவர்களைப் பார்த்து குறை சொல்லாதீர்கள். மீண்டும் அவர்கள் விருப்பப் பட்ட துறைகளில் அவர்களை படிக்க வைக்க உங்கள் பொருள்களை செலவு செய்யுங்கள். அவர்களே உங்கள் சொத்துக்களாக மாறி விடுவார்கள்.
படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு ஆனால் பாடம் படிக்காத மேதைகள்தான் இந்த உலகத்தில் அதிகம். விஞ்ஞானிகளாக அறிவியல் மேதைகளாக அரசியல் விற்பன்னர்களாக பிரதமர்களை முதல்வர்களை உருவாக்கியவர்களாக பிரதமர்களாக நாட்டின் ஜனாதிபதிகளாக கோலோச்சி இருக்கிறார்கள் இன்னும் இருந்து வருகிறார்கள்.
நமதூரைப் பொறுத்தவரை அல்லாஹ்வின் அருளால் நீங்கள் என்னவெல்லாம் படிக்கலாம் என்று அதன் தலைவாயில்களை திறந்து காட்டுவதற்கு IQRA , KCGC என்ற இருபெரும் சக்திகள் உங்கள் வருகைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு வேண்டிய பொருளாதார வசதிகளை செய்து தர உலகளாவிய காயல்நல மன்றங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
உங்கள் சுண்டு விரல் அசைவுக்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கதவு மூடினால் ஒன்பது கதவு திறக்கும் என்பது பழைய மொழி. ஒன்பது கதவுகளுமே திறந்துதான் இருக்கின்றன சற்று தள்ளிப் பாருங்கள் அவை திறந்து உங்களுக்கு வழி கொடுக்கும் உங்கள் கல்விக் கண் திறக்கும்.
நீ நடப்பதற்கு பாதை தேடாதே
நீ நடந்தால் அதுவே பாதை ஆகும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross