Re:...இமாலய வெற்றி... posted bymackie noohuthambi (kayalpatnam )[19 May 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43885
அனிதா ராதா கிருஷ்ணன் அவர்கள் பெற்றுள்ள வாக்குகள் எண்ணிக்கை 88357, அவரை எதிர்த்து களம் இறங்கிய எல்லோரும் பெற்ற வாக்குளையும் NOTA வாகுகளையும் கூட்டிப் பார்த்தால் அப்போதும் 9906 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருக்கும் அனிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்கள் கூட்டணி கட்சியினர் அளித்த வாக்குகள் மட்டும் இவை என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். இந்த தொகுதி மக்களுக்கு நீங்கள் செய்த சேவையின் அடையாளங்கள் நன்றி கடன்கள் இவை. எனவே உங்கள் சேவை மனப் பான்மை இந்த மக்களுக்காக நீங்கள் இன்னும் விடுபட்டுள்ள சேவைகளை முழுமையாக செய்து தர சபதம் எடுத்துக் கொள்ளுங்கள். சாலை வசதிகள், குடி நீர் வசதிகள் இன்னும் எத்தனையோ இந்த காயல்பட்டினத்துக்கும் இந்த தொகுதிக்கும் நிறைய தேவைப் பட்டுக் கொண்டிருக்கிறது.
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை நீங்கள் எங்கு அமைத்துக் கொண்டாலும் ஒவ்வொரு ஊருக்கும் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை மனு நீதி தினமாக கொண்டு எல்லா ஊர் மக்களையும் சந்தித்து ஆவன செய்யுங்கள் என்று உங்களை வேண்டிக் கொள்கிறோம்.
திமுக தோற்று விட்டதாக ஒரு மாயை. இந்த சட்டமன்றத்தில் அண்ணாவின் தம்பி தங்கைகள் மட்டுமே அரசாள இருக்கின்றீர்கள். திமுகவிலிருந்து வந்ததுதான் அண்ணா திமுக. திமுக என்று தான் கடைசியில் முடியும். ஒரு விசித்திரமான வசீகரமான சட்டமன்றம் பூத்துக் குலுங்க போகிறது. ஒரு வலுவான எதிர்க் கட்சியாக நீங்கள் இயங்கப் போகிறீர்கள். இங்கே 110 விதியின் கீழ் - அறுதிப் பெரும்பான்மை விதியின் கீழ் எந்த சட்டமும் இயற்ற முடியாது. நீங்கள் இருவரும் இணைந்து செயல்பட்டால்தான் இந்த தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும். 94 வயதிலும் ஒரு இளைஞனாக வலம் வந்து நாட்டு மக்களை சந்தித்து 13 வது முறையாக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஒரு சரித்திர நாயகனின் தலைமையில் நீங்கள் செயல்படப் போகிறீர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross