அண்ணாச்சியின் வெற்றி ஏற்கெனவே தெரிந்தது தான். அண்ணாச்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். காயல் மாநகர மக்கள் என்றென்றும் திமுகவின் தலைமையின் பக்கம் இருக்கும் வரையில் திமுகவை வெல்ல முடியாது. திருச்செந்தூர் தொகுதி மக்கள் குறிப்பாக காயல்மாநகர மக்கள் என்றைக்கும் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு வாக்களிப்பதில்லை. அதனால் தான் அண்ணாச்சி போன்ற நல்லவர்கள் மிக சுலபமாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல முடிகிறது. நமது தொகுதியின் நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் அண்ணாச்சி அவர்கள் தான் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடில்லை.
2. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[19 May 2016] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43874
அஸ்ஸலாமு அலைக்கும்
நம் அன்பு .அண்ணாச்சி அவர்களுக்கு >> வாழ்த்துக்கள் << தங்களின் பனி தொய்வின்றி சிறப்பாக முன் போல நம் தொகுதி மக்களுக்கு தொடரட்டும் .....
தாங்கள் தொடர்ந்து வெற்றி பெற முழுமையான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள் ...நம் மக்கள் தங்கள் மீது அளவுக்கு அதிகமான உல் பாசம் வைத்து இருப்பது தான் ...
பொதுவாக நம் தொகுதி மக்கள் ...கட்சிக்கும் மீறி தங்கள் மீது தான் அதிகமான் பாசமும் ,, நேசமும் வைத்து இருக்கிறார்கள் ..இது தான் உண்மை ...இதை தாங்களும் அறிந்து இருப்பீர்கள் ....
அண்ணாச்சி அவர்கள் இதை உணர்ந்து தொடர்ந்து நம் ஊர் மக்கள் மீது பாசம் வைக்க வேணும் .....இதை தான் நம் ஊர் மக்கள் எதிர் பார்க்கிறார்கள் ...
>>>> மீண்டும் நம் அருமை அண்ணாச்சி அவர்களை வாழ்த்துகிறேன் ......
தங்களின் நல்ல சேவைகள் நம் மக்களுக்கு தொடரட்டும் ..
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி ,,வருபர் & அண்ணாச்சி அவர்கள் வீட்டுக்கு நம் ஊர் மக்கள் பொது நல சேவைக்காக ,, போனால் ,, ஊர் மக்களை வெளியே கொஞ்சமும் '' காட்க வைக்காமல் உள்ளே அழைத்து மரியாதையுடன் பேச கூடியவர்கள் ..என்கிற ஒரு தனி மதிப்பு நம் அண்ணாச்சி அவர்களுக்கு உண்டு .... வஸ்ஸலாம்
3. Re:...இமாலய வெற்றி... posted bymackie noohuthambi (kayalpatnam )[19 May 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43885
அனிதா ராதா கிருஷ்ணன் அவர்கள் பெற்றுள்ள வாக்குகள் எண்ணிக்கை 88357, அவரை எதிர்த்து களம் இறங்கிய எல்லோரும் பெற்ற வாக்குளையும் NOTA வாகுகளையும் கூட்டிப் பார்த்தால் அப்போதும் 9906 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருக்கும் அனிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்கள் கூட்டணி கட்சியினர் அளித்த வாக்குகள் மட்டும் இவை என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். இந்த தொகுதி மக்களுக்கு நீங்கள் செய்த சேவையின் அடையாளங்கள் நன்றி கடன்கள் இவை. எனவே உங்கள் சேவை மனப் பான்மை இந்த மக்களுக்காக நீங்கள் இன்னும் விடுபட்டுள்ள சேவைகளை முழுமையாக செய்து தர சபதம் எடுத்துக் கொள்ளுங்கள். சாலை வசதிகள், குடி நீர் வசதிகள் இன்னும் எத்தனையோ இந்த காயல்பட்டினத்துக்கும் இந்த தொகுதிக்கும் நிறைய தேவைப் பட்டுக் கொண்டிருக்கிறது.
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை நீங்கள் எங்கு அமைத்துக் கொண்டாலும் ஒவ்வொரு ஊருக்கும் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை மனு நீதி தினமாக கொண்டு எல்லா ஊர் மக்களையும் சந்தித்து ஆவன செய்யுங்கள் என்று உங்களை வேண்டிக் கொள்கிறோம்.
திமுக தோற்று விட்டதாக ஒரு மாயை. இந்த சட்டமன்றத்தில் அண்ணாவின் தம்பி தங்கைகள் மட்டுமே அரசாள இருக்கின்றீர்கள். திமுகவிலிருந்து வந்ததுதான் அண்ணா திமுக. திமுக என்று தான் கடைசியில் முடியும். ஒரு விசித்திரமான வசீகரமான சட்டமன்றம் பூத்துக் குலுங்க போகிறது. ஒரு வலுவான எதிர்க் கட்சியாக நீங்கள் இயங்கப் போகிறீர்கள். இங்கே 110 விதியின் கீழ் - அறுதிப் பெரும்பான்மை விதியின் கீழ் எந்த சட்டமும் இயற்ற முடியாது. நீங்கள் இருவரும் இணைந்து செயல்பட்டால்தான் இந்த தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும். 94 வயதிலும் ஒரு இளைஞனாக வலம் வந்து நாட்டு மக்களை சந்தித்து 13 வது முறையாக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஒரு சரித்திர நாயகனின் தலைமையில் நீங்கள் செயல்படப் போகிறீர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross