தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் மே 16 அன்று நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
இறுதி நிலவரப்படி, முஸ்லிம் லீக் சார்பாக, தி.மு.க. கூட்டணியில் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட - காயலர் கே.ஏ.எம். அபூபக்கர், 1194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
முஹம்மது அபூபக்கர் (முஸ்லிம் லீக்) 70763
ஷேக் தாவூது (அ.தி.மு.க.) 69569
மாரியப்பன் (தே.மு.தி.க.) 15858
கதிர்வேலு (பா.ஜ.க.) 14286
ஜாபர் அலி உஸ்மான்ஜி (எஸ்.டி.பி.ஐ.) 5993
ராஜாமறவன் (பார்வர்ட் பிளாக்) 3581
முத்து ராமலிங்கம் (நாம் தமிழர் கட்சி) 1681
திருமலை குமாரசாமி (பா.ம.க.)1350
சந்தன மாரியப்பன் (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்)844
முஹம்மது அப்துல் ரஹ்மான் (சுயேட்சை) 812
பூபதி ராஜபாண்டியன் (சுயேட்சை) 730
ஜாஹிர் அப்பாஸ் (சுயேட்சை) 481
கே.எம். அப்துல்லாஹ் (சுயேட்சை) 420
பி.கருப்பசாமி (சுயேட்சை) 210
எம்.கபூர் (சுயேட்சை) 190
NOTA 1969
1. Re:... posted byM.I. முசா நெய்னா (Buraidha - Saudi)[19 May 2016] IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 43861
அல்ஹம்துலில்லாஹ்.எல்லா புகழும் இறைவனுக்கே.. நமது மண்ணின் மைந்தர் சட்டமன்ற உறுப்பினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்த லீக் கட்சியின் தலைமைக்கும் , வெற்றி பெற அயராது பாடுபட்ட திமுக கட்சி தலைமை மற்றும் தொண்டர்களுக்கும் நமது காயல் மாநகர மக்கள் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருக்க கடமை பட்டுள்ளோம். சட்டமன்றத்தில் தங்களது திறமையை பயன்படுத்தி, தொகுதி மக்களுக்கும் , நமது சமுதாய மக்களுக்கும் தொண்டாற்றி , அத்தொகுதியின் நிரந்தர உறுப்பினர் என்ற பெருமையை வரும் காலங்களில் தக்க வைத்து கொள்ள வாழ்த்துகிறேன்.
3. Re:... posted byM.A.C.Mujahith (Kayalpatnam)[19 May 2016] IP: 117.*.*.* India | Comment Reference Number: 43863
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அல்ஹம்துலில்லாஹ்!!
கடைசியில், நாம் யாவரும் எதிர்பார்த்த படி, அழகிய தேர்தல் முடிவை அவன் தந்து, நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டான்!
காயல்பட்டினத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றை நம் பாசத்திற்குரிய சகோதரர் அல்ஹாஜ் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பதிவு செய்துவிட்டார்!
அவரும், நாமும் சார்ந்துள்ள திமுக கூட்டணிக்கு இது பின்னடைவே என்றாலும், கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் முன்னேற்றமே!
தட்டிக் கேட்க யாருமே இல்லாத நிலை 5 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் இருந்தது. இனி அந்நிலை இருக்காது. ஓர் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களும், மக்கள் நலனை மட்டுமே சிந்தித்து, அதனடிப்படையில் செயலுக்கு வரும் நல்ல திட்டங்களும் என புதிய சட்டமன்றம் பிரகாசிக்கட்டும்!
இறையருளால் வெற்றி நாயகனாக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கும் நம் பாசமிக்க சகோதரர் அல்ஹாஜ் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், நம் சமுதாயத்தின் நிறைவான பிரதிபலிப்பாகவும், தனக்கு வாக்களித்த – வாக்களிக்காத – தன் தொகுதியைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்களின் நலனுக்காக பாரபட்சமின்றி இயங்குபவராகவும் அல்லாஹ் அவரை ஆக்கியருள்வானாக... இன்னும் பலப்பல உயர்பதவிகளில் அவரை அமர்த்தி கருணையுள்ள நாயன் அழகு பார்ப்பானாக!
இத்தனை நல்ல முடிவு கிடைப்பதற்காக, தன் பணிகளையெல்லாம் ஒத்தி வைத்துவிட்டு இயங்கிய, உடலால் - உள்ளத்தால் - பொருளால் ஓய்வின்றி உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நிறைவான நற்கூலிகளை அல்லாஹ் வழங்கியருள்வானாக...
குறிப்பாக, நம் சகோதரரின் வெற்றிக்கு உழைப்பதற்காக கடையநல்லூர் வந்து பரப்புரையில் ஈடுபட்டு, யாரும் எதிர்பார்க்காத நிலையில் - சொல்லாமல் நம்மை விட்டும் மறைந்துவிட்ட மர்ஹூம் பாளையம் இஸ்மாஈலின் மண்ணறை - மறுமை வாழ்வுகளை அல்லாஹ் ஒளிமயமாக்கி வைப்பானாக...
தேர்தலில் நல்ல முடிவைத் தந்த நாயன், அதற்காக உழைத்த என் நண்பனின் மறுமை வாழ்விலும் உயர் சுவனம், உன்னத மக்களுடன் இணைந்திருப்பு என மிகச் சிறந்த நல்ல முடிவுகளைத் தந்தருள்வானாக, ஆமீன், ஆமீன், யாரப்பல் ஆலமீன்!
அனைவருக்கும் நன்றி! ஜஸாக்குமுல்லாஹு கைரா!! வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்!!! (As Received )
4. Towards George Fort posted byJAHIR HUSSAIN VENA (BAHRAIN)[19 May 2016] IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 43864
அலஹம்துலில்லாஹ்
In the history first Kayalite Marching towards George Fort..
May Almighty Allah help you to succeed more and more .. Its just recognitions of your past social services..
8. HEARTY CONGRATULATION AND DUA.. posted byV.M.T.MOHAMED HASAN (HONG KONG)[19 May 2016] IP: 59.*.*.* Hong Kong | Comment Reference Number: 43869
ASSALAMU ALAIKUM WA RAHMATHULLAHI WA BARAKATHAHU.
AL-HAMDULILLAH - AL-HAMDULILLAH
SAY ALLAHU AKBAR
MUSLIM LEAGUE ZINDABAD
HAPPIEST DAY IN OUR KAYALPATNAM HISTORY.
WE GET AN M.L.A. FROM OUR TOWN, MY DEAREST JANAB HAJI K.A.M.MOHAMED ABUBACKER, WHO HAS DEDICATED HIS YOUTH AND HIS WHOLE LIFE FOR THE SERVICE OF OUR KAYALPATNAM, UMMAH AND OUR NATION.
WE HAVE STARTED OUR SERVICE FOR THE UMMAH FROM QUAID E MILLATH YOUNG MENS SOCIAL SOCIETY FROM 1989, AND CONTINUE TILL TODAY AND INSHA ALLAH WE WILL WORK FOR THE UMMAH AND OUR TOWN AND NATION TILL OUR LAST IN THIS TEMPORARY WORLD (DUNYA) FOR THE SAKE OF ALMIGHTY ALLAH.
INDEED TODAY IS THE DAY OF CELEBRATION AMONG ALL OUR KAYALITES LIVING IN KAYALPATNAM AND IN ALL OVER THE PLACES AND HEARTLY WE CONGRATULATE OUR ABUBACKER SAHIB, AND WE ALL PRAY FOR HIS AAFIYATH, SALAAMATH, BARAKTH IN THIS WORLD AND IN HERE AFTER AND ALMIGHTY ALLAH ACCEPT ALL OUR GOOD DEEDS,AMEEN.
THE FIRST MEMBER OF LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU STATE FROM OUR NATIVE KAYALPATNAM, ITS AN HISTORY.
THE FIRST ELECTED MLA OF TAMIL NADU STATE ASSEMBLY IN INDIAN UNION MUSLIM LEAGUE OWN SYMBOL "LADDER" FOR THE FIRST TIME IN HISTORY. ALLAHU AKBAR.
ALLAH GIVE HIM IZZATH IN SELECTING HIM IN THE ELECTION FOR HIS SELFLESS SACRIFICE, DEDICATION TOWARDS THE UMMAH, NATIVE AND NATION.
WORKED TOWARDS UMMAH VIA INDIAN UNION MUSLIM LEAGUE TILL FROM HIS YOUTH AND HE COME FROM THE BOTTOM OF THE LEAGUE AND HE WAS OUR FIRST MSF STATE LEADER, YOUTH LEADER AND NOW OUR GENERAL SECRETARY.
HIS FACE ALWAYS KEEP SMILING AND WITH GOOD RESPONSE TO ALL AT ANYTIME.
ALWAYS THINKING OF UMMAH AND TALKING ABOUT THE WELFARE OF UMMAH.
AL-HAMDULILLAH
DEAREST FRIEND STAYS PHYSICALLY IN HONG KONG - BUT HEART WITH HIM.
அல்ஹம்துலில்லாஹ்.
எல்லா புகழும் இறைவனுக்கே.
நமது மண்ணின் மைந்தர் சட்டமன்ற உறுப்பினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.தங்கள் பணி சிறக்க அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.
10. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[19 May 2016] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43871
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ் .......நம் அருமை மண்ணின் மைந்தன் ....KAM . அபூபக்கர் அவர்கள் ......செய்தியை தான் நமது ஊர் மக்கள் யாவர்களும் எதிர் நோக்கி காத்து இருந்தார்கள் ......மாறி ,,மாறி ,,எண்ணிக்கை வந்த வண்ணமே இருந்ததால் ...அனைவர்களின் எண்ணமும் கதிகலங்கி போய் ,,மேலும் எங்களின் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து விட்டது இருந்தார்கள் ......
ஒரு சில இடங்களில் இருந்து தோல்வி என்கிற தகவல் கூட வந்த வண்ணமே இருந்தது குறிப்பிடத்தக்கது ...அப்போது ..நாங்கள் அனைவர்களும் மனம் ஒடிந்து போய் இருந்தோம் .......
.நம் அருமை மண்ணின் மைந்தன் ....KAM . அபூபக்கர் அவர்கள் ....வெற்றி என்கிற செய்தியை அறிந்ததும் தான் .நமது ஊர் மக்கள் ( என் ) மனதில் மகிழ்சி ஆனது ......எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே ....
அருமை சகோதரர் ..KAM .. அபூபக்கர் அவர்களின் நல்ல மனதுக்கும் ,, அவரின் கடினமான் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி என்றே தான் இதை சொல்லணும் ....
அருமை சகோதரர் ..KAM .. அபூபக்கர் அவர்களுக்கு >>>> எங்களின் மனம் உகந்த '' நல் வாழ்த்துக்கள் '' ......தங்களின் சாதனைகள் ,, தங்களை தேர்வு செய்த ஊர் மக்களுக்கும் ,, தங்களின் தாய் மண்ணான ...நம் ஊர் மக்களுக்கும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாகவும் ஆமீன்....ஆமீன் ....
>>>> மீண்டும் வாழ்த்தி ,, துவா ...செய்கிறேன் .......
13. இறைவன் அருளட்டும்! posted byS.K.Salih (Kayalpatnam)[19 May 2016] IP: 180.*.*.* India | Comment Reference Number: 43877
சகோதரர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களின் தேர்தல் வெற்றிக்காக இயங்கும் “கோட்டையை நோக்கி” எனும் வாட்ஸ் அப் குழுமத்தில் அடியேன் பதிவிட்ட கருத்தை அப்படியே இங்கு தருகிறேன்...
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அல்ஹம்துலில்லாஹ்!!
கடைசியில், நாம் யாவரும் எதிர்பார்த்த படி, அழகிய தேர்தல் முடிவை அவன் தந்து, நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டான்!
காயல்பட்டினத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றை நம் பாசத்திற்குரிய சகோதரர் அல்ஹாஜ் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பதிவு செய்துவிட்டார்!
அவரும், நாமும் சார்ந்துள்ள திமுக கூட்டணிக்கு இது பின்னடைவே என்றாலும், கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் முன்னேற்றமே!
தட்டிக் கேட்க யாருமே இல்லாத நிலை 5 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் இருந்தது. இனி அந்நிலை இருக்காது. ஓர் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றமும், மக்கள் நலனை மட்டுமே சிந்தித்து, அதனடிப்படையில் செயலுக்கு வரும் நல்ல திட்டங்களும் என புதிய சட்டமன்றம் பிரகாசிக்கட்டும்!
இறையருளால் வெற்றி நாயகனாக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கும் நம் பாசமிக்க சகோதரர் அல்ஹாஜ் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களை - நம் சமுதாயத்தின் நிறைவான பிரதிபலிப்பாகவும், தனக்கு வாக்களித்த – வாக்களிக்காத – தன் தொகுதியைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்களின் நலனுக்காக பாரபட்சமின்றி இயங்குபவராகவும் அல்லாஹ் ஆக்கியருள்வானாக... இன்னும் பலப்பல உயர்பதவிகளில் அவரை அமர்த்தி கருணையுள்ள நாயன் அழகு பார்ப்பானாக!
இத்தனை நல்ல முடிவு கிடைப்பதற்காக, தன் பணிகளையெல்லாம் ஒத்தி வைத்துவிட்டு இயங்கிய, உடலால் - உள்ளத்தால் - பொருளால் ஓய்வின்றி உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நிறைவான நற்கூலிகளை அல்லாஹ் வழங்கியருள்வானாக...
குறிப்பாக, நம் சகோதரரின் வெற்றிக்கு உழைப்பதற்காக கடையநல்லூர் வந்து பரப்புரையில் ஈடுபட்டு, யாரும் எதிர்பார்க்காத நிலையில் - சொல்லாமல் நம்மை விட்டும் மறைந்துவிட்ட எனதன்பு நண்பன் மர்ஹூம் பாளையம் இஸ்மாஈலின் மண்ணறை - மறுமை வாழ்வுகளை கருணையுள்ள அல்லாஹ் ஒளிமயமாக்கி வைப்பானாக...
தேர்தலில் நல்ல முடிவைத் தந்த நாயன், அதற்காக உழைத்த என் நண்பனின் மறுமை வாழ்விலும் உயர் சுவனம், உன்னத மக்களுடன் இணைந்திருப்பு என மிகச் சிறந்த நல்ல முடிவுகளைத் தந்தருள்வானாக, ஆமீன், ஆமீன், யாரப்பல் ஆலமீன்!
அனைவருக்கும் நன்றி! ஜஸாக்குமுல்லாஹு கைரா!! வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்!!!
வாழ்த்துக்களுடனும், ஆனந்தக் கண்ணீருடனும்,
எஸ்.கே.ஸாலிஹ்
(தாய்ச்சபையின் தரம் தாழ்ந்த உறுப்பினர்)
18. Re:...வாழ்த்துக்களும் து ஆ க்களும் posted bymackie noohuthambi (kayalpatnam )[19 May 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43884
சகோதரர் அபூபக்கர் வெற்றி பெறவேண்டும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக அவர் கோட்டையில் அமர வேண்டும் அதன் மூலம் கடையநல்லூர் மட்டுமின்றி அவர் பிறந்த மண்ணான காயல்பட்டினமும் அவர் சார்ந்துள்ள இஸ்லாமிய சமுதாயமும் பயன்பெற வேண்டும் என்று அல்லாஹ்விடம் இறைஞ்சியவர்களில் நானும் ஒருவன்.
அவர் முஸ்லிம் லீக் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் பட்டபோதும் தேர்தல் நாள் அன்றும் அவருக்காக து ஆ க்கள் செய்து அவருக்கு வாழ்த்து செய்தியும் குறுஞ்செய்தியாக அனுப்பிக் கொண்டிருந்தேன்.
இன்று காலை முதல் கடையநல்லூர் மெர்குரி ஏற்றமும் இறக்கமுமாக இருந்தபோது நமது இதயமும் அப்படி மேலும் கீழும் அடித்தது. இறுதியாக வந்த செய்தி நம் எல்லோர் உள்ளங்களிலும் பாலை வார்த்தது நிம்மதி பெருமூச்சு விட்டு அல்லாஹ்வை புகழ்ந்து அவருக்கு வாழ்த்து செய்தியும் அனுப்பினோம். அல்ஹம்து லில்லாஹ்.
அவர் வேட்பாளராக அறிவிக்கப் பட்ட பிறகு அவரை எதிர்த்து களமிறங்கும் வேட்பாளர்களை பற்றி நான் எண்ணும் போது மாற்று மதத்தவர்களை விட இஸ்லாமியர்களே அவருக்கு எதிராக களம் இறங்கும் கண்ணறாவியை எண்ணி வருத்தப் பட்டேன்.சுமார் 6-7 முஸ்லிம்கள் அவருக்கு எதிராக களத்தில் நிற்கிறார்கள்... எப்படி கரையேற போகிறாரோ என்று ஒரு பக்கம் திக் திக் என்று மனம் பதைபதைத்தது.
இந்த வெற்றி கணக்கை பார்க்கும்போது அவரை எதிர்த்து களம் இறங்கிய போலி முஸ்லிம் லீக் சகோதரர் -ஷேக் தாவூத் அவர்கள் - டெபொசிட் இழந்து செய்வதறியாது திகைத்து நிற்கும் மக்கள் நலக் கூட்டணி முதல் அமைச்சர் கனவில் மிதந்த விஜயகாந்த் கட்சியை சார்ந்தவர் ஆகிய இருவரும் பெற்றுள்ள வாக்குகளையும் தாண்டி சகோதரர் அபூபக்கர் வெற்றி வாகை சூடி இருக்கிறார் என்றால் அது அல்லாஹ்வின் மிகப் பெரும் கருணைதான்.
அவருக்காக முஸ்லிம்கள் கேட்ட து ஆ க்கள்தான். சகோதரர் PHM ஹபீப் முஹம்மது அவர்கள் அருந்தவப் புதல்வன் ஹாஜி முஹம்மது இஸ்மாயில் அவர்கள் ஆசைப் பட்டு களம் இறங்கி அவருக்காக பரப்புரை செய்து ஊர் திரும்பும் வழியில் ஷஹீதாகினாரே அவருக்காகவும் அல்லாஹ் இவரது வெற்றியை தந்திருக்கிறான் என்றே நான் நினைக்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் சகோதரர் அபூபக்கர் அவர்களுக்கு நீடிய ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் வழங்கி இந்த சமுதாயத்துக்கு நல்ல பல சேவைகள் செய்வதற்கு இந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஒரு கருவியாக பயன்படுத்துவதற்கு அருள்புரிவானாக.
சிங்கத்தை அதன் குகையின் வாசலிலேயே சந்தித்து வெற்றி வாகை சூடி வந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
19. Re:...வாழ்த்துக்கள்! posted byA.Tharvesh Mohammed (Kayalpatnam)[19 May 2016] IP: 117.*.*.* India | Comment Reference Number: 43888
மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருந்த வெற்றிச் செய்தி! அல்ஹம்துலில்லாஹ்!
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
அருமைச் சகோதரர் KAM முஹம்மது அபூபக்கர் அவர்கள், தமது இளமைக் காலத்திலிருந்தே பொது நலனிலும், சமூக முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டு தொலை நோக்குப் பார்வையுடன் செயலாற்றி வருபவர். தாம், தமது குடும்ப முன்னேற்றம் என்று ஒவ்வொருவரும் ஓடி உழைத்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில் இஸ்லாமிய சமுதாய நலனுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்.
25 ஆண்டுகளுக்கு முன் காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பில் துவங்கிய அவரது சேவை இன்று கோட்டையை நோக்கி பயணிக்கவுள்ளது.இந்த சட்ட மன்ற உறுப்பினர் பொறுப்பினை கடமையுணர்வுடன், அவருக்கு வாக்களித்த , வாக்களிக்காத மக்கள் என்று வேறுபாடு பார்க்காமல் அத்தொகுதி மக்கள் அனைவர்களும் பயன் பெரும் அளவில் தம்மால் இயன்ற அளவுக்கு சேவையாற்றி, சட்ட மன்ற உறுப்பினர் நிதியினை பயனுள்ள பல திட்டங்களுக்கு பயன்படுத்தி அத்தொகுதி மக்கள் மகிழ்ச்சியடையும் அளவுக்கு அவர் செயலாற்றுவார் என்று நம்பிக்கை கொள்ளலாம், இன்ஷா அல்லாஹ்!
அவரது சேவைகள் தொய்வின்றி தொடரவும், மென்மேலும் வளர்ந்தோங்கவும், மேலும் பல உயர்பதவிகள் பெற்று அதன் மூலம் நம் சமுதாயம் பலன் பெறவும் எல்லாம் வல்ல அல்லாஹ் பேரருள் புரிவானாக! ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross