தமிழகத்தில், 16.05.2016. அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, வாக்குப்பதிவு முடிவுகள் நேற்று (19.05.2016.) வெளியாயின.
அதன்படி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பெரும்பான்மை வாக்குகள் வேறுபாட்டில் வெற்றிபெற்றுள்ளார்.
இதை முன்னிட்டு, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகிலும், மெயின் ரோடு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் முனையிலும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட துணைச் செயலாளர் ‘பெத்தப்பா’ சுல்தான், நிர்வாகிகளான எம்.எச்.அப்துல் வாஹித், எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன், ஷாநவாஸ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
தகவல்:
‘பெத்தப்பா’ சுல்தான்
இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|