காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யாவின் புதிய கட்டிட விரிவாக்கப் பணி துவக்க விழா 02.05.2016. அன்று நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர். விரிவான விபரம் வருமாறு:-
அடிக்கல் நாட்டு விழா:
ஷாதுலிய்யா தரீக்காவின் அகில இந்திய தலைமையகமாகத் திகழ்கிறது காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா. 150ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ள இந்நிறுவனத்தில், மத்ரஸத்துல் ஃபாஸிய்யா எனும் ஜாவியா அரபிக் கல்லூரியும் நடைபெற்று வருகிறது.
இதன் கட்டிடம் பழமையடைந்தும், தற்காலத் தேவைகளுக்கேற்ற இடவசதியில்லாமலும் இருப்பதைக் கருத்திற்கொண்டு, கட்டிடத்தை விரிவாக்கிப் புதிதாகக் கட்டிட ஜாவியா நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 30.12.2015. புதன்கிழமையன்று 16.30 மணியளவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
கட்டிட விரிவாக்கப் பணி துவக்க விழா:
02.05.2016. திங்கட்கிழமையன்று 09.30 மணியளவில், புதிய கட்டிட விரிவாக்கப் பணி துவக்க விழா, எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ தலைமையில், ஷாதுலிய்யா தரீக்காவின் கலீஃபத்துல் குலஃபா மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.அப்துல் காதிர் முத்துவாப்பா முன்னிலையில் நடைபெற்றது.
துவக்கமாக, புதிய கட்டிட விரிவாக்கப் பணிக்கான சிமெண்ட் கலவையை பிரமுகர்கள் ஒவ்வொருராக நிலத்தில் கட்டிடப் பணி துவங்கவுள்ள இடத்தில் இட்டனர்.
தொடர்ந்து மேடை நிகழ்ச்சி நடைபெற்றது. மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் எம்.ஏ.சி.முஜாஹித் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எம்.அப்துல்லாஹ் மக்கீ காஷிஃபீ ஃபாழில் தேவ்பந்தீ - ஜாவியா குறித்து அறிமுகவுரையாற்றினார்.
ஜாவியா அரபிக் கல்லூரியின் தற்போதைய செயல்பாடுகள், புதிய கட்டிடம் கட்டப்படுவதற்கான அவசியம் & தேவைகள் குறித்து, ஜாவியா அரபிக் கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தின் காஷிஃபீ உரையாற்றினார்.
ஜாவியா அரபிக் கல்லூரி & அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி ஆகியவற்றின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
ஜாவியா அரபிக் கல்லூரியின் திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் பிரிவு முதன்மை ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அப்துல்லாஹ் ஃபாஸீ துஆ இறைஞ்ச, ஜலாலாவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
அடிக்கல் நாட்டு விழா, கட்டிட விரிவாக்கப் பணி துவக்க விழா ஆகிய இரு நிகழ்ச்சிகளிலும் - மஹ்ழரா அரபிக் கல்லூரியின் தலைவர் எஸ்.கே.இசட்.ஆப்தீன், அதன் செயலாளர் எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, பெரிய - சிறிய குத்பா பள்ளிகளின் தலைவர் ஆர்.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர், புதுப்பள்ளி தலைவர் எஸ்.எம்.உஸைர், எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ், மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, அதன் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ உள்ளிட்ட பிரமுகர்களும், நகரின் பல்வேறு ஜமாஅத்துகள் & பொதுநல அமைப்புகளின் அங்கத்தினரும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
ஹாஃபிழ் M.A.செய்யித் முஹம்மத்
படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.A.C.முஜாஹித்
ஜாவியா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |