இன்று வெளியான ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளின் படி, காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் 3 மாணவியர், ‘குழந்தை வளர்ப்பு & உணவு மேலாண்மை’ பாடத்தில், மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளனர். அரபி மொழி பாடத்தில், எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவி மாநில அளவில் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார். விபரம் வருமாறு:-
“குழந்தை வளர்ப்பு & உணவு மேலாண்மை” பாடத்தில் மாநில அளவில் முதல் மூன்றிடங்கள்:-
முதலிடம்:
பி.சித்தி ஸல்மா
(பெற்றோர் பெயர்: பத்ரு ஜமான் - ஹபீபா ஃபாத்திமா)
தீவுத் தெரு.
பெற்ற மதிப்பெண்கள்: 198/200
இரண்டாமிடம்:
எம்.ஏ.ஜெய்னப் மஃபாஸா
(பெற்றோர் பெயர்: எம்.கே.பீ.முஹம்மத் ஆரிஃப் - எச்.எம்.நஸீரா)
நெய்னார் தெரு.
பெற்ற மதிப்பெண்கள்: 197/200
மூன்றாமிடம்:
எம்.ஏ.நவ்ஃபிலா
(பெற்றோர் பெயர்: எம்.எச்.மஹ்ரூஃப் அலீ)
சுலைமான் நகர்.
பெற்ற மதிப்பெண்கள்: 197/200
இம்மூவரும் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி மாணவியர்.
“அரபி மொழி” பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம்:-
எஸ்.ஏ.டீ.முகத்தஸா
(பெற்றோர் பெயர்: எம்.எம்.செய்யித் அபூதாஹிர் - வி.எம்.எம்.எஸ்.ஃபாத்திமா முனவ்வரா)
காயிதேமில்லத் நகர்.
பெற்ற மதிப்பெண்கள்: 195/200
இவர், எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவியாவார்.
[படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன @ 18:28 / 17.05.2016.] |