காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக சாரல், சிறுமழை, இதமழை என மாறி மாறிப் பொழிந்து வானிலையின் வழமையை மாற்றியுள்ளது.
14.05.2016. சனிக்கிழமையன்று 23.00 மணி துவங்கி, இன்று 14.30 மணி வரை சிற்சிறு இடைவெளிகளுக்கிடையே நகரில் சாரல் மழை பெய்துகொண்டேயிருந்தது.
இதன் காரணமாக, நகரில் இதமான வானிலை நிலவுகிறது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து இன்று பெறப்பட்டுள்ள மழை பொழிவுப் பட்டியல் படி, காயல்பட்டினத்தில் 0 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|