Re:...சந்தியாவின் திருமகளே வருக இந்தியாவின் தமிழ்மகளே வருக posted bymackie noohuthambi (kayalpatnam )[23 May 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43906
சந்தியாவின் திருமகளே வருக!
இந்தியாவின் தமிழ்மகளே வருக!!
தலைசிறந்த நல்லாட்சி தருக!!!
5 கோடியே 80 லட்சத்து 65 ஆயிரத்து 967 வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்ற தமிழகத்தில் உங்களுக்கு வாக்களித்தவர்கள் எந்தனை பேர் என்ற கணக்கில் வேண்டுமானால் வித்தியாசங்கள் இருக்கலாம் ஆனால் அத்தனை பேருக்கும் இன்று நீங்கள் முதலமைச்சர் என்ற கணக்கில் வித்தியாசமே இல்லை.
தேர்தல் காலங்களிலே நீங்கள் எடுத்து வைத்த கருத்துக்கள் மாற்றுக் கருத்துள்ளவர்கள் உங்களுக்கு எதிராக எடுத்து வைத்த கருத்துக்கள் எல்லாம் இன்றுடன் முடிவுக்கு வந்து விட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தளபதி ஸ்டாலின் அவர்களும் அவரது சகாக்களும் உங்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு இந்த தமிழக அரசியல் வரலாற்றில் நல்லதொரு ஜனநாயக பண்பை விதைத்திருக்கிறார்கள். அழகிய முன்மாதிரியை உங்களுக்கு எடுத்துக் காட்டி இருக்கிறார்கள். நீங்களும் அதற்கு இணையாக உங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நேற்றைய நாளிதழ்களை புரட்டிப் பார்த்தால் அதில் ஒரு உண்மை தெரியும். நமது அருகிலுள்ள கேரளா மாநிலத்தில் முதல்வர் பதவி வகித்த உம்மன் சாண்டி அவர்களை நாளை மறுநாள் முதல்வராக பதவி ஏற்கவிருக்கும் ராஜன் அவர்கள் வீடு தேடி சென்று பதவி ஏற்பு விழாவிலே கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்ததுடன் இருவரும் கை குலுக்கி தங்கள் நட்பை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தால் அதுவே ஒரு உலகின் அதிசயங்களில் ஒன்றாக கருதப் படுகிறது, இனிமேல் அது சாத்தியமான ஒன்றுதான் என்பதை நீங்கள் இருவரும் நிரூபித்து காட்டி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
தமிழக சட்டமன்றம் இது நாள்வரை ஒரு வலுவான எதிர்க் கட்சியை பெற்றிருக்கவில்லை. அதுவும் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் மட்டுமே களத்தில் இருக்கிறீர்கள்.கம்யூனிஸ்டுகள் இல்லை பாட்டாளி மக்கள் கட்சி இல்லை சுயேச்சைகள் இல்லை.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கலக்கம் இல்லை, விடுதலை சிறுத்தைகள் இல்லை தேசிய முற்போக்கு திராவிட கழகம் இல்லை இப்படிப் பட்ட சட்டமன்றத்தில் வலுவான வாதங்கள் நடை பெறும் சுவையான கருத்து பரிமாற்றங்கள் இருக்கும் மக்களுக்கு பயனளிக்கும் நலத் திட்டங்கள் ஒருமனதாக நிறைவேற்றப் படும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.ஆசைப் படுகிறார்கள்.அதே நேரம் ஒரு முஸ்லிம் அமைச்சர்கூட உங்கள் அமைச்சரவையில் இடம் பெறவில்லையே என்று இஸ்லாமியர்கள் ஆதங்கப் படுகிறார்கள். அவர்களது அபிலாசைகளையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அடுத்த ஐந்து ஆண்டுகள் வளம் மிக்க தமிழகத்தை இந்தியாவுக்கே முன்மாதிரியான தமிழகத்தை நீங்கள் இருவரும் இணைந்து வழங்க வேண்டும் என்று உங்களை வேண்டி, உங்கள் ஆட்சி நல்லாட்சியாக மக்கள் நலம் பெறும் ஆட்சியாக அமையவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
சிலர் ''வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்'' என்பார்கள்.சிலர் ''வாழ்த்தி வணங்குகிறேன்'' என்பார்கள். வாழ்த்துவதற்கு வயதும் தேவை இல்லை வணங்கவும் தேவை இல்லை. நல்ல உள்ள உள்ளம் இருந்தால் போதும்.
வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross