Re:...சட்டமன்றத்தில் கலைஞருக்குரிய வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று திமுக வற்புறுத்தவேண்டும் posted bymackie noohuthambi (kayalpatnam )[24 May 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43907
திமுக சட்டமன்ற தலைவராக திரு ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுக்க பட்டது பாராட்டத் தக்கது. அகவை 94 ஐக் கடந்தாலும் கலைஞர் கடந்த தேர்தல் பரப்புரையின்போது ஒரு இளைஞராகாவே நாடு முழுவதும் சுற்றி வந்தார். அவர்கள் முதலமைச்சராக மீண்டும் மகுடம் சூட்டுவார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.
ARITHMETIC கில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவன் CHEMISTRY யில் மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்ததுபோல் ஆகி விட்டது. கூட்டணி வியூகம் கைகொடுக்கவில்லை. பழம் நழுவி பாலிலே விழுந்திருந்தால் அது பால் சோறாக ஆகியிருக்கும். ஆனால் அந்த பழம் நழுவி விஷத்திலே விழுந்து விடக் கூடாது என்று கலைஞரின் முன்னாள் தளபதி தனது கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட கருணாநிதி தோல்வி அடைய வேண்டும் என்பதிலேயே மிக கவனமாக இருந்து வியூகம் வகுத்தார். அவர் பேச்சுக்கள் வீரம் செறிந்தவையாக இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் கருணாநிதியை நோக்கி எய்த அம்பாகவே இருந்தது. பேசக் கூடாத நேரத்தில் பேசுவதும் பேசவேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பதுமாக பேச வேண்டியதை பேசாமல் பேசக் கூடாததை பேசி முதல் அமைச்சர் வேட்பாளரே டெபொசிட் இழக்கும் அளவுக்கு கொண்டு போய்விட்டார் அவரும் போட்டியிடாமல் பின் வாங்கி அவரது கட்சியினர் அவ்வளவு பேரும் டெபொசிட் இழக்கும் அளவுக்கு தள்ளி விட்டார். எதிலுமே சமரசம் செய்துகொள்ளாத கொள்கையுள்ள கம்யூனிஸ்ட்களும் இந்த தேர்தலில் இவருடன் நட்புடன் இணைந்தார்கள். முஸ்லிம்களை எதிர்த்து முஸ்லிம்களே களத்தில் நின்ற அலங்கோலத்தையும் கண்டோம். மக்கள் நலக் கூட்டணி அதிமுகவின் B TEAM என்ற ஸ்டாலின் அவர்களின் கருத்து கணிப்பு சரியாகி விட்டது.
வாக்குக்கு பணம் வாங்காதீர்கள் என்று சொன்னவர்களையே தமிழக வாக்காளர்கள் டெபொசிட் இழக்க வைத்திருக்கிறார்கள் என்றால், இலவசங்களும், பணப் பட்டுவாடவும் தான் தமிழகத்தில் தேர்தல் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கிறது, கொள்கை கோட்பாடுகள் எல்லாம் ஓரங்கட்டு பட்டுவிட்டன என்பதைத்தான் நாம் பரவலாக உணர முடிகிறது.
ஸ்டாலின் அவர்களை முடிசூட்டு விழாவில் அம்மா மதிக்க வில்லை என்ற கலைஞரின் குற்றச்சாட்டு நியாயமானதுதான் என்றாலும் முந்தைய காலங்களில் இவர்களில் யாரும் யாரையும் அழைத்ததும் இல்லை. இதுவே முதல்தடவை. சரத்குமாரா ஸ்டாலினா என்றால் அம்மாவுக்கு சரத்குமார்தான் முக்கியம். அம்மாவின் ஆணைக்கு கட்டுப் படுபவர் சரத்குமார். நாளையே கட்சியை கலைத்து விட்டு அதிமுகவில் இணைந்து விடுங்கள் மந்திரி பதவி காத்திருக்கிறது என்றால் அதை செய்ய அவர் தயாராக உள்ளார். நாஞ்சில் சம்பத்துக்கு INNOVA கார் கிடைக்கும்போது என்ன செய்தார், வைகோவை உதறி தள்ளிவிட்டு அங்கே போய் சங்கமமாகவில்லையா , அதேபோல் தான் இதுவும். எனவே கலைஞர் அவ்வளவு மனம் சங்கடப் படுவது அர்த்தமற்றது.
ஒரு வலுவான எதிர்க் கட்சியாக திமுக சட்டமன்றத்தில் கோலோச்சுவதால் கட்டாயம் கலைஞர் அவர்கள் சட்டமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள இந்த அரசு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். நீதி மன்றம் சென்றாவது வாதாடி இதை பெறவேண்டும்.
இரண்டு திராவிட இயக்கங்களும் - தாயும் சேயும் இணைந்து இந்த சட்டமன்றத்தில் சட்டங்கள் இயற்றி மக்களுக்கு நன்மை செய்ய போகிறார்களா அல்லது மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறியது என்பதுபோல் ஐந்து வருடங்களை வீணடிக்கப் போகிறார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.
ஸ்டாலின் அவர்கள் பொறுப்புள்ள எதிர் கட்சி தலைவராக இருக்கவும் ஜெயலலிதா அவர்கள் எல்லா உறுப்பினர்களையும் அரவணைத்து செல்லும் பொறுப்புள்ள முதலமைச்சராகவும் இருந்து இந்த சட்டமன்றத்தை வழி நடத்தி செல்ல வாழ்த்துகிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross