தமிழக முதல்வராக, 6-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார். ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
பின்னர் முதல்வராக பதவியேற்றதற்காக கையெழுத்திட்டார்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்த விழாவில், பகல் 12.08 மணிக்கு முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்.
முன்னதாக நாட்டுப் பண் சுருக்கமாக இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதாவைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் ஸ்ரீநிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், பி.சரோஜா, கே.சி.கருப்பண்ணன், எம்.சி.சம்பத், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், டி.ஜெயக்குமார் ஆகிய 14 பேரும் கூட்டாக அமைச்சர்களாக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து கொண்டனர்.
அடுத்ததாக கே.சி.வீரமணி, கே.டி.ராஜேந்திர பாலாஜி, வி.எம்.ராஜலட்சுமி, மருத்துவர் மணிகண்டன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.வளர்மதி ஆகியோர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து கொண்டனர்.
விழாவின் நிறைவாக நாட்டுப்பண் முழுமையாக இசைக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலின் பங்கேற்பு:
ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளரும் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன், திமுக எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, சேகர்பாபு, வாகை.சந்திரசேகர், மா.சுப்பிரமணியம் ஆகியோரும் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
தகவல்:
தி இந்து
[புகைப்படம் இணைக்கப்பட்டது @ 8:50 am / 24.05.2016] |