காயல்பட்டினத்தின் முதலாவது சட்டமன்ற உறுப்பினர் எனும் தரத்தைப் பெற்றுள்ள கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கருக்கு, நகர பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
தமிழக சட்டமன்றத் தேர்தல் 16.05.2016. அன்று நடைபெற்றது. இதில், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் - அதில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் போட்டியிட்டார். அவருக்கும், எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஷேக் தாவூதுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. மக்கள் நலக் கூட்டணி, பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும் கனிசமான வாக்குகளைப் பிரிப்பார்கள் என்று கருதப்பட்டதால், யாருக்கு வெற்றி என்பதை உறுதியாகச் சொல்ல இயலாத நிலை காணப்பட்டது.
இவ்வாறிருக்க, 19.05.2016. அன்று தேர்தல் முடிவுகள் வெளியாயின. நண்பகல் 12.30 மணியளவில் கடையநல்லூர் தொகுதியின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. அதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், 1194 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதிமுக வேட்பாளர் ஷேக் தாவூத் இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டார். இதனையடுத்து, கடையநல்லூரில் திமுக கூட்டணியினர் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.
இந்தத் தேர்தல் முடிவின் மூலம், நகரின் முதலாவது சட்டமன்ற உறுப்பினர் எனும் தகுதியைப் பெற்றதால், காயல்பட்டினத்திலும் அவரது வெற்றி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இதற்கு முன், கட்சிகளின் சார்பில் கவிஞர் எஸ்.செய்யித் அஹ்மத், காயல் மவ்லானா, காயல் மகபூப் உள்ளிட்ட காயலர்கள் போட்டியிட்டு, குறைந்த வாக்குகள் வேறுபாட்டில் வெற்றிவாய்ப்பை இழந்தமை குறிப்பிடத்தக்கது.
நகரின் முதலாவது சட்டமன்ற உறுப்பினர் எனும் தகுதியைப் பெற்ற நிலையில், 20.05.2016. வெள்ளிக்கிழமையன்று, கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் காயல்பட்டினம் வருகை தந்தார். அவருக்கு, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள - கட்சியின் நகர கிளை அலுவலகத்தில், முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் சார்பில் - அதன் தலைவர் பீ.மீராசா மரைக்காயர் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, சிறிய குத்பா பள்ளியில் ஜும்ஆ தொழுகைக்குப் பின் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நகர பொதுமக்கள் சார்பில் காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் அன்று மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக, நெய்னார் தெருவிலுள்ள தனது இல்லத்திலிருந்து அவர் தஃப்ஸ் முழங்க, அரபி பைத்துகள் பாடி நகர்வலமாக நிகழ்விடம் அழைத்துச் செல்லப்பட்டார்.
ஜலாலிய்யாவில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு, மஸ்ஜித் மீக்காஈல் பள்ளியின் நிர்வாகி எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை தலைமை தாங்கினார்.
நகரப் பிரமுகர்களான எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, பிரபு சுல்தான் ஜமாலுத்தீன், வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, லேனா அப்துல் காதிர், பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, எஸ்.ஐ.அப்துல் காதிர், எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, எஸ்.எம்.உஸைர், ஜெஸ்மின் கலீல், மவ்லவீ கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர், வாவு சித்தீக், எம்.ஏ.ஹஸன், ஆத்தூர் பி.ஏ.மரைக்கார், ஏரல் ஸாதிக்குல் அமீன், முத்தையாபுரம் முஸ்தஃபா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நகரப் பிரமுகர்களான எஸ்.டீ.வெள்ளைத்தம்பி, ஏ.எஸ்.ஜமால், டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன், எம்.எல்.ஷேக்னா லெப்பை, எம்.ஏ.கிதுரு முஹம்மத், காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், திமுக நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத், பாட்டப்பத்து முஹம்மத் கடாஃபி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஏற்புரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ,இப்றாஹீம் மக்கீ நன்றி கூற, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் முதல்வரும் - தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயுமான மவ்லவீ எஸ்.டீ.அம்ஜத் அலீ ஃபைஜீ மஹ்ழரீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
வேட்பாளரின் வெற்றிக்காக, கடையநல்லூரில் களப்பணியாற்றிவிட்டு ஊர் திரும்புகையில் வாகன விபத்தில் உயிரிழந்த பாளையம் முஹம்மத் இஸ்மாஈலின் மண்ணறை, மறுமை நல்வாழ்வுக்காக இதன்போது சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகளின பிரதிநிதிகள், திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
முன்னதாக, சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கருக்கு - பாளையம் ஹபீப் முஹம்மத், ஜெய்ப்பூர் காயல் நல மன்ற தலைவர் எம்.ஏ.செய்யித் அபூதாஹிர் ஆகியோர் சால்வை அணிவித்தனர்.
மகுதூம் ஜும்ஆ பள்ளி, தாயிம்பள்ளி, புதுப்பள்ளி, ஹாஜியப்பா தைக்கா பள்ளி, ஸெய்யிதினா பிலால் பள்ளி, பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளி, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளி, முஹ்யித்தீன் பள்ளி, அஹ்மத் நெய்னார் பள்ளி, பெரிய குத்பா பள்ளி, சிறிய குத்பா பள்ளி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி, ஆறாம்பள்ளி, மஹ்ழரா அரபிக் கல்லூரி, ஜாவியா அரபிக் கல்லூரி, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகியவற்றின் சார்பிலும்,
காழி அலாவுத்தீன் சங்கம், இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF), காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம், மன்பஉல் பரக்காத் சங்கம், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பிலும் அதன் பிரதிநிதிகள் சால்வை அணிவித்தனர்.
காயல்பட்டினம் நகர்மன்ற அங்கத்தினர் சார்பில் இ.எம்.சாமி, ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஆகியோரும், செய்தியாளர்கள் சார்பில் ‘தினத்தந்தி’ செய்தியாளர் பாஸ்கரும் சால்வை அணிவித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், அதன் காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், நிர்வாகிகளான பெத்தப்பா சுல்தான், ஏ.கே.மஹ்மூத் சுலைமான், எம்.எச்.அப்துல் வாஹித், எம்.இசட்.சித்தீக், ஏ.ஆர்.ஷேக் முஹம்தம், பத்ருத்தீன், கே.எம்.டீ.சுலைமான், எஸ்.டீ.கமால், எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.எஸ்.முஹ்யித்தீன் தமத்பி, தெற்கு ஆத்தூர் ஐ.செய்யித் அப்பாஸ் ஆகியோரும் - புதிய சட்டமன்ற உறுப்பினருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினர்.
தகவல் & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|