அதிமுக தேர்தல் அறிக்கையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் "தற்போதைய கணக்கீட்டு முறைப் படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமின்றி
வீடுகளுக்கு வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. தமிழக முதல்வராக 6-வது முறை யாக ஜெயலலிதா
நேற்று பதவி யேற்றார். தொடர்ந்து அவர், தலைமைச் செயலகத்தில் முதல்வர் பொறுப்பையும் ஏற்றார். இதைத் தொடர்ந்து, 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று, 100 யூனிட் இலவச மின்சாரம்.
இந்த அறிப்பின்படி, அதிகபட்சமாக - மின் நுகர்வோர்கள், 350 ரூபாய் வரை சேமிக்க முடியும்.
இனி நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை எளிதாக அறிய, காயல்பட்டணம்.காம் - மின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்? என்ற சிறப்புப் பக்கத்தை உருவாக்கியுள்ளது.
இந்த சிறப்புப் பக்கத்தை, இணையதளத்தின் தகவல் மையம் பட்டியல் (MENU) கீழ் உள்ள 'லிங்க்' மூலமும் காணலாம்.
அந்த பக்கத்தை காண இங்கு சொடுக்கவும்.
அந்த பக்கத்தில், உங்கள் மின்சார பயன்பாட்டு அளவை (யூனிட்) நீங்கள் பதிவு செய்தால்,
இது வரை நீங்கள் செலுத்தி வந்த தொகையும், இனி நீங்கள் செலுத்த வேண்டிய தொகையும் கணக்கிட்டு காண்பிக்கப்படும்.
அந்த பக்கத்தை காண இங்கு சொடுக்கவும். |