மாணவ-மாணவியரின் பள்ளி கோடை விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், கோடைகால பயிற்சி முகாம் 10 நாட்களாக நடத்தப்பட்டு, நிறைவு நிகழ்ச்சியும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
அல்லாஹ்வின் திருப் பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கிளையின் சார்பாக. கடந்த 14 .05 .2016. முதல் தொடங்கப்பட்ட கோடை கால பயிற்ச்சி முகாம் 24 .05 .2016 அன்று நிறைவடைந்தது அல்ஹம்துலில்லாஹ் .
நிறைவு தினத்தின் நிகழ்ச்சியாக மாணவர்களின் குர்ஆன் மனன திறமை மற்றும் செற்பொழிவுகள் கோடை கால பயிற்ச்சியில் பெற்ற அனுபவங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.
மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக கிளை தலைவர் சகோ சம்சுதீன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட பேச்சாளர்கள் சகோ. சேக் அவர்கள் பெற்றோர்கள் கடமை என்ற தலைப்பிலும் மாவட்ட P R .0. சகோ புஹாரி அவர்கள், உலக கல்வி மட்டுமே உயர்வை தருமா ? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
தொடர்ந்து மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியாக மாணவரணி பொறுப்பாளர் ரஷீன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |