செய்தி: ஃபாத்திமா நர்ஸரி பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு! பெற்றோர் மீண்டும் முற்றுகை!! வேறு பள்ளிகளில் மக்களைச் சேர்த்தால் ஆவன செய்வதாக அதிகாரிகள் கருத்து!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:..வைர ஊசி என்றாலும் வயிற்றில் குத்திக்கொள்ள முடியுமா? posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[13 June 2016] IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 44036
(C &P ) "பெற்றோர்களுள் ஒரு சாரார், இப்பள்ளியிலேயே தம் மக்களைத் தொடர்ந்து படிக்க வைக்கப் போவதாகவும், பள்ளியைத் திறக்க ஆவன செய்யுமாறும் கேட்டதற்கு, தற்போதைய இடத்தில் பள்ளி இயங்க அரசு அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும், வேறு ஏதேனும் வாடகைக் கட்டிடங்களில் இயக்க முடிவெடுத்தால், தற்காலிகமாக அனுமதி பெற்றுத் தருவதாகவும் கூறினர். இக்கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை"
(c & p )
ஒரு மாநில அரசாங்கத்தை அம்மாநிலத்திலுள்ள ஒர் ஊர் அந்த ஊரில் உள்ள ஒரு பள்ளியின் 250 பிள்ளைகளின் பெற்றோர்கள் தங்கள் விருப்பபடி சட்ட விதிகளுக்கு மாற்றமாய் ஒரு அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எத்தனை நாளைக்குத்தான் உங்களால் போராட முடியும்!
அரசு விதிகளுக்கு மாற்றமாய் இயங்கும் இந்த பள்ளி கட்டிடத்திற்கு பதிலாக வேறு இடத்தில் இயங்க ஏற்பாடு செய்யுங்கள் நாங்கள் முழுஉதவிகளையும் ஒத்துழைப்பையும் தருகிறோம் என்று அதிகாரிகள் கூறிய பிறகும் அடாவடடித்தனம் செய்வது அழகல்ல!
நிச்சியம் நீங்கள் நினைப்பதுபோல் இவ்விடத்தில் பள்ளி இயங்குவது 99% சதவீதம் சாத்தியமில்லை!
ஆகவே, பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு உடனே மாற்று ஏற்பாடுகளை செய்து அப்பிஞ்சுள்ளங்களின் படிப்புக்கு எந்த இடையூறும் ஏற்படாவண்ணம் அடுத்த முயற்சியில் இறங்குவதுதான் அறிவுடைதன்மைக்குறிய செயல்!
வைர ஊசி என்றாலும் வயிற்றில் குத்திக்கொள்ள முடியுமா? உபயோகிக்க இயலவில்லையென்றால் சற்று இடந்தள்ளி வைப்பதுதான் ஏற்புடைய செயல்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross