செய்தி: உரிமம் பெறாத இளைஞர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதைக் கண்டித்தும், போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமலிருக்க வலியுறுத்தியும் – “நடப்பது என்ன?” குழும ஏற்பாட்டில் காயல்பட்டினத்தில் பள்ளி மாணவர்கள் பேரணி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
விசுவாசமிகு மண்ணின் மைந்தன்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[03 August 2016] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44370
சகோதரர் மக்கி நூஹுத்தம்பி காக்கா அவர்களுக்கு, எனக்கு தெரிந்த சிறு விளக்கத்தை பகிந்துகொள்ள விழைகிறேன்!
இந்த "நடப்பது என்ன" வாட்ஸப் குழுமம் பள்ளி மாணவர்களை வைத்து ஒரு விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து செய்திருக்கிறது. இதில் நகராட்சி தலைவி அவர்கள் ஆர்வத்துடன் கலந்திருக்கிறார்கள்!
மற்றைய உறுப்பினர்கள் (சகோதரர் சம்சுதீன் அவர்களைத்தவிர )வேறு எவரும் ஏன் கலந்துகொள்ளவில்லை என்றால்,அவர்களுக்கெல்லாம் தெரியாமல் இருக்கலாம்.ஊர் நலனுக்காக ஓய்வின்றி உழைப்பதின் விளைவாக உரிய நேரத்தில் விஷயம் அவர்களை சென்றடைந்திருக்காது என எண்ணுகிறேன்!
அடுத்து,நமதூரில் ஒரு இரு சக்கர வாகனம் மோதி ஒரு முதியவர் மௌத்தான செய்தி தங்களுக்கு தெரியாது என நினைக்கின்றேன்!
இலைமறை காயாக போதை பழக்கங்கள் பைய,.பைய படமெடுத்து வருகிறது,அதன் பிடரி முள்ளைத்திருவி முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதான் இக்குழுமத்தின் நோக்கமாகும்!
அடுத்து வரும் 6-ந்தேதி நமதூர் வழித்தடம் பேருந்துகள் நமதூருக்கு வராமல் பாதை மாறி செல்லும் செயலை கண்டித்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்திற்கு இந்த வாட்ஸப் குழுமம் தயாராகி வருகிறது.
ஊரிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் பொதுவான அழைப்பை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.வரும் ஜும்மா அன்றும் கொடுக்க இருக்கிறார்கள்!
வெகுதூர ஊர்களிலிருந்து வரும் நமதூர் மக்களை நடுநிசியில் ஆறுமுகநேரியில் "அம்போ"வென்று இறக்கி விட்டு விட்டு அடைக்கலாபுரம் வழியாக தடம் மாறி தப்பித்து செல்லும் பேரூந்துகளைக்கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம்!
பலமுறை மாவட்ட ஆட்சியாளரிடம் மனுகொடுத்தும் முழுமையான பலன் கிடைக்காத காரணத்தினால் இப்புண்ணிய போராட்டத்தில் குதித்துள்ளது இந்த "நடந்தது என்ன" வாட்ஸப் குழுமம்!
நமதூரின் மீதும்,நமதூர் மக்களின் இன்னல்கள் மீதும் உண்மையான அக்கறையுள்ள அனைத்து சகோதரர்களும்(அன்றைய தினம் தவிர்க்க முடியாமல் வர இயலாதவர்களைத்தவிர) மற்றைய சகோதரர்கள் ஒட்டுமொத்தமாக கலந்தது கொண்டு ,என்னால் இயன்ற நன்மையை இக்காயல் கண்மணிகளுக்காக செய்ய சித்தமாக இருக்கிறேன், நல்ல நோக்கத்தின் எதிரொலியாக திகழும் இந்த நல்ல காரியத்தை யார் முன்னெடுத்து சென்றாலும் சரிதான்!
அவர்களுடன் ஒத்துழைத்து ஒருங்கிணைபவனின் நானும் ஒருவன் என்று சொல்பவனே உண்மையான இவூரின் விசுவாசமிகு மண்ணின் மைந்தனாவான் என்பதே என்னுடைய எளிமைமிகு கருத்தாகும்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross