செய்தி: காயல்பட்டினத்தை அரசுப் பேருந்துகள் புறக்கணிப்பதைக் கண்டித்து “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் திருச்செந்தூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...RED LETTER DAY posted bymackie noohuthambi (kayalpatnam )[07 August 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44381
சரித்திரத்தில் ஒரு முக்கிய நிகழ்வு நடக்கும் நாள் - வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வு நடக்கும் நாள் இவற்றை ஆங்கிலத்தில் RED LETTER DAY என்று சொல்வார்கள்.
6.8.2016 அப்படி காயல்பட்டின சரித்திரத்தில் ஒரு முக்கிய நாளாக பதிவு செய்யப் பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி ஆறரை கோடி இணையதளங்கள் இயங்கிவரும் நிலையில் கடந்த 6-8-1991 அன்று டிம் பெர்னெர்ஸ் லீ என்பவரால் உருவாக்கப்பட்ட WWW எனப்படும் ’world-wide-web’ இன்று தனது 25-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. என்பதை படித்த போது நமது நாட்டில் இணையதளங்களின் அசுர வளர்ச்சி நம்மை அதிர்ச்சி அடைய செய்கிறது. நமதூரில் அதன் தாக்கம் எப்படி பட்ட விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது என்பதையும் இன்றைய நிகழ்வு நமக்கு புரிய வைக்கிறது.
தொலைக்க காட்சி பெட்டி போன்று இருந்த கணினி மடிக்கணினியாக மாறி இப்போது கையடக்க தொலைபேசியில் எல்லாவற்றையும் பதிவிறக்கம் செய்ய முடியும் விரல் நுனியில் உலகில் நடக்கும் விஷயங்களை சொடுக்கி பார்த்துக் கொள்ளலாம் என்ற அளவுக்கு நாம் முன்னேறியுள்ளோம்.
WHAT IS UP ? என்ன நடக்கிறது என்பதுதான் இதன் தமிழ் அர்த்தம். அதுவே காலப் போக்கில் WHATSUPP என்று உரு மாறி இன்று நம் இளைஞர்கள் அதையே நடப்பது என்ன ? என்ற ஒரு குழுமமாக மாற்றி சாதனை படைத்துள்ளார். வாழ்த்துக்கள்.
நமதூர் பிரச்சினை இதில் கட்சி முஹல்லாஹ் பிரச்சினைகளை ஒதுக்கி தள்ளி விட்டு எல்லோருக்கும் நேற்று இன்று நாளை என்று ஒருநாளில்லாவிட்டால் ஒரு நாள் இந்த பேருந்து பிரச்சினை தலைவலியாகவே இருந்து வருகிறது என்பதை மனதில் கொண்டு களத்தில் எல்லோரும் நிற்பதை காண முடிந்தது.
கட்டுப்பாட்டுடனும் கடமை உணர்வுடனும் கண்ணியத்துடனும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை கண்ட காவல் துறையினரே அசந்து போனார்கள் . தெய்வீக உணர்வு உள்ளவர்கள் சாத்வீக குணங்கள் உள்ளவர்கள் என்று போற்றப்படுபவர்கள்தான் நாம் என்பதை எல்லோரும் கண்கூடாக கண்டார்கள் .
வேறு ஊர்களில் ஆர்ப்பாட்டம் என்றாலே காவல் துறைக்கு அன்று உறக்கம் இருக்காது, பாதுகாப்புக்காக எல்லா முன்னேற்பாடுகளை செய்ய வேண்டி இருக்கும் ஆனால் இங்கே காவல் துறைக்கு என்ன உறுதிமொழி கொடுத்தார்களோ அதை நிறைவேற்றி காவல் துறைக்கு பொறுப்பான முதலமைச்சர் அவர்களையும் காயல்பட்டினம் மக்கள் மனம் குளிர செய்திருக்கிறார்கள். இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து செயல்படுத்திய ''என்ன நடக்கிறது'' வாட்ஸுப் குழுமத்துக்கு நமது பாராட்டுக்கள்.
அவர்கள் சிந்திய வியர்வைகளும் இதற்காக வியூகம் வகுத்து செயல்பட்ட விதமும் வீண் போகாது.ஊர் முழுவதும் சுற்றி திரிந்து நோட்டீஸ் கொடுத்தார்கள் ஜும்மா நாளில் பள்ளிவாசல்களில் அறிவிப்பு செய்ய ஏற்பாடு செய்தார்கள். எல்லா வீட்டுக் கதவுகளையும் இவர்கள் தட்டினார்கள் என்பதை விட எல்லோரது உணர்வுகளையும் உசுப்பி விட்டார்கள் என்பதுதான் உண்மை. ஊரிலிருந்து வருபவர்களுக்கு வாகன வசதியும் குடிப்பதற்கு தண்ணீர் வசதியும் மிக நேர்த்தியாக செய்திருந்தார்கள். அவர்கள் முயற்சி நிச்சயம் வெல்லும்.
கூடிய விரைவில் நடத்துனர்களும் ஓட்டுநர்களும் தங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு காயல்பட்டினம் வழியாக செல்ல வேண்டிய வாகனங்களை அந்த வழியே ஓட்டி செல்வார்கள் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்டுள்ளது. நம்பிக்கைதானே வாழ்க்கை.
A SMALL STEP FORWARD , BUT A GREAT LEAP FOR MANKIND
நிலவில் முதலில் காலடி எடுத்து வைத்த ஆர்ம்ஸ்ட்ரோங் கூறிய வார்த்தைகள் இவை.இந்த குழுமத்தின் முயற்சிக்கும் பொருந்தும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross